Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் குழந்தைகள் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி.போலீஸ் கமிஷனர் காமினி தொடங்கி வைத்தார்.

0

 

திருச்சி ரோட்டரி கிளப்புகள் சார்பில்
குழந்தைகள் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி
போலீஸ் கமிஷனர் காமினி தொடங்கி வைத்தார்.

ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 மற்றும் திருச்சி மண்டல அனைத்து ரோட்டரி சங்கங்கள், ஜோசப் கண் மருத்துவமனை,
ஜி.வி.என். ரிவர் சைடு மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி இயக்கம் இணைந்து நடத்திய குழந்தைகள் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி கலெக்டர் அலுவலக குழந்தைகள் அருகே இருந்து தொடங்கிய பேரணியை
மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, ரோட்டரி மாவட்டம் 3000 மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி ராஜ்குமார், பாரதிதாசன் பல்கலைக்கழக
என். எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி பிரபா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்தப் பேரணி எம்.ஜி.ஆர். சிலை, மாணவர்கள் சாலை வழியாக தென்னூர் உழவர் சந்தை மைதானத்தை சென்றடைந்தது.
பேரணியில் ரோட்டேரியன்கள், பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர்.
ரோட்டரி சிறப்பு திட்டங்களின் செயலாளர் முரளி, மாவட்ட நிர்வாக செயலர் செந்தில்குமார், சிறப்பு திட்ட சேர்மன் கே. ராணி ரோஸ்லின், ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு, ரிவர் சைடு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார்
உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை மண்டல ஒருங்கிணைப்
பாளர்கள் கேசவன், எட்வின், ஜானகி ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.