Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கலைக்காவேரி நுண்கலைக்கல்லூரியில் ஜெர்மன் நாட்டு மாணவர்கள் பங்கேற்ற பன்னாட்டு இசை பயிற்சி பட்டறை’

0

திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் ஜெர்மன் நாட்டு மாணவர்கள் 35 பேர்கள் பங்கேற்ற பன்னாட்டு இசை பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

தென்னிந்திய இசையான தமிழ்ச் செவ்வியல் இசை மற்றும் மேற்கத்திய ஜெர்மன் இசை இடையிலான ஒற்றுமை வேற்றுமை ஒத்திசைவான தனித்தன்மை குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலைக்காவிரி இசைத்துறை மாணவர்கள் கர்னாடக சங்கீத முறையில் மெட்டமைத்து ஜெர்மன் மொழியில் பாடல் பாடினர். இப்பாடல் ஜெர்மன் மாணவர்களை வெகுவாக கவர்ந்து பாராட்டுப் பெற்றது. அதனைத் தொடர்ந்து கருவி இசையான வீணை, வயலின், மிருதங்கம், குழல் கடம், கஞ்சிரா, மோர்சிங் உள்ளிட்ட கருவி இசை கச்சேரியை மாணவர்கள் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து ஜெர்மன் மாணவர்கள் பாடல்கள் பாடினர்.


இந்நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் திருச்சி மறைமாவட்ட ஆயர் அருள்பணி சந்திரசேகரன், கத்தோலிக்கத் திருச்சபையின் திருச்சி மறைமாவட்ட குருகுல முதல்வரும் கல்லூரியின் வளர்ச்சிக்குழுத் தலைவருமான அருள்பணி அந்துவான் அடிகளார், கல்லூரியின் மேனாள் செயலர் அருள்பணி. சூசை அலங்காரம் மற்றும் பிசப் ஈபர் கல்லூரியின் முதல்வர் முனைவர் பால்தயாபரன் , காவிரி கலைத் தொடர்பக இயக்குநர் அருள்பணி. தீபன் குழந்தை ராஜ், தூய பவுல் இறையியல் கல்லூரி பேராசிரியர் அருள்பணி. ரமேஷ் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.முன்னதாக கல்லூரியின் செயலர் அருள்பணி. லூயிஸ் பிரிட்டோ வரவேற்புரையாற்றினார்.

 

இசைத்துறைத் தலைவர் முனைவர் லட்சுமி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.