Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

36 வருடத்தில் அடியெடுத்து வைக்கும் உதயமூர்த்தியை மையமாக வைத்து வெளிவந்த உன்னால் முடியும் தம்பி திரைப்படம்.

0

 

உன்னால் முடியும் தம்பி: உதயமூர்த்தியை மைய்யமாக வைத்து கமல்ஹாசனும், பாலசந்தரும் கைகோர்த்த நாள்!

நம் வாழ்க்கையிலும், சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த விடா முயற்சிவேண்டும். இந்த விடா முயற்சிக்கு முடியும் என்ற எண்ணம் வேண்டும். சக்தி வாய்ந்த இந்த எண்ணங்கள் நமது சமுதாயத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களை சொன்ன படம் 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் -9 ம் தேதி வெளியான உன்னால் முடியும் தம்பி.

கமல்ஹாசன், ஜெமினி கணேசன், சீதா நடிப்பில் உருவான உன்னால் முடியும் தம்பி படத்தின் இயக்குநர் கே. பாலசந்தர். பாலசந்தர் அவர்களே வியந்து பார்த்த ஒருவர் எம். எஸ். உதயமூர்த்தி என்பவர்.எம். எஸ். உதயமூர்த்தி இளைஞர்களை மைய்யமாக வைத்து மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பை நிறுவியவர்.இந்த அமைப்பின் மூலம் இளைய தலைமுறையினரின் ஆற்றல் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது என்று புரிய வைத்தவர்.

பலவேறு நம்பிக்கை தரும் சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர்.”நம்மால் முடியும் தம்பி -நம்பு “என்பது இவரது தாரக மந்திரம். இந்த தலைப்பிலேயே பிரபல வார இதழில் தொடர் ஒன்றை எழுதினார்.இவர் எழுதிய புத்தகங்களில் எண்ணங்கள் என்ற புத்தகம் மிக முக்கியமானது. எம். எஸ். உதயமூர்த்தி அவர்களின் செயல்பாடுகளால் உந்துதல் அடைந்த பாலசந்தர், இவரின் தாராக மந்திரத்தை கொஞ்சம் மாற்றி உன்னால் முடியும் தம்பி என்ற பெயரில் படமாக எடுத்தார். படத்தின் நாயகன் கமலுக்கு உதயமூர்த்தி என்று பெயர் வைத்தார்.

சாஸ்திரீய இசை குடும்ப பின்னணியிலிருந்து வரும் நாயகனுக்கு சமூக சேவை செய்வதில் ஆர்வம் இருக்கும். இதற்கு குடும்பம் தடையாக இருக்கும். இதை எதிர் கொள்வதுதான் படத்தின் கதை. கமலை விட இந்த படத்தில் அதிகம் ஸ்கோர் செய்வது ஜெமினி கணேசன் அவர்கள்தான். பிலகிரி மார்தாண்டம் பிள்ளையாக வாழ்ந்திருப்பார் ஜெமினி. ஒரு சைலன்ட் வில்லனை கண் முன் காட்டியிருப்பார். கமலும், சீதாவும் ஒரு யதார்த்த காதலர்களாக நடித்திருப்பார்கள்.

இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக இருக்கும் பாலசந்தர் அவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தியாக பிரம்மத்தின் கீர்த்தனைகளை தனது படங்களில் இடம் பெற செய்து விடுவார். இந்த படத்திலும் சில பாடல்கள் இடம் பெறும். ‘பஞ்சம கீர பாஹிமாம்’கீர்த்தனையின் சில வரிகள் பாடப்பட்டு இதே ராகத்தில் மானிட சேவை துரோகமா? என்று தமிழ் பாடலாக மாறும்.

ஜாதி எதிர்ப்பு திருமணங்களையும், இசை அனைத்து பிரிவினருக்கும் பொது என்ற கருத்தையும் ஆழமாக பதிவு செய்த படம் உன்னால் முடியும் தம்பி. குடியின் பாதிப்பை சமரசம் இல்லாமல் சொல்லியிருப்பார் பாலசந்தர். கதை மந்தார்கள், எம். எஸ். உதயமூர்த்தி, இசை, பாடல்கள், கருத்து என பல அம்சங்களுக்காக 36வது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் உன்னால் முடியும் தம்பி திரைப்படம் நினைவில் கொள்ளப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.