Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பெரியாரும் மணியம்மையும் குடும்ப கட்டுப்பாடு செய்து இருந்தார்களா?திருச்சியில் எச். ராஜா கேள்ளி.

0

.

 

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட வண்ணாரப்பேட்டை அலுவலகத்தில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது ;- டெல்டா விவசாயிகள் வாயில் மண்ணை கொட்டியுள்ளனர் காங்கிரசார். மேகதாது அணை கட்டுவோம் என்று கூறிய காங்கிரசாரை சம்பிரதாயத்துக்காக கூட ஸ்டாலின் கண்டிக்கவில்லை. அங்கு போய் சித்தராமையா, சிவக்குமாருக்கு பாத பூஜை செய்ய சென்றுள்ளார். மேகதாது அணை கட்ட விடமாட்டோம் என தெளிவான முடிவில் பாரதிய ஜனதா உறுதியாக இருந்தது.

காவிரி தண்ணீர் வராததற்கு காரணம் திமுக தான். அப்போது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கருணாநிதி கண்டு கொள்ளாமல் தமிழகத்தை அழிப்பதற்காக கர்நாடகாவில் பல அணைகளை கட்ட அனுமதித்தார். அதுபோல் தான், இப்போது மு.க ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளார்.

தொடர்ச்சியாக திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து, உப்பு தின்றால் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்.

செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி மீது பாஜக வழக்கு தொடரவில்லை. ஏற்கனவே உள்ள வழக்குகளின் அடிப்படையில்தான் செந்தில்பாலாஜி, பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. அமலாக்கத் துறைக்கு வந்துள்ள அறிக்கையின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுகிறது.

 

அடுத்து திருச்சியா, தூத்துக்குடியா என்பது தெரியவரும்.
அனிதா ராதாகிருஷ்ணனின் பெயரும் அடிபடுகிறது.

ஆடி 1-ந் தேதி பொன்முடி வீட்டில் சோதனை. செந்தில் பாலாஜி வழக்கில் மட்டும் 19 ஆயிரம் கோடி உள்ளதாக அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்காக திமுக அமைச்சர்கள் மீது சோதனை நடத்தவில்லை.

குளித்தலையில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, திமுக ஆட்சிக்கு வரும். அப்போது செந்தில்பாலாஜி சிறைக்குச் செல்வார் என்றார். ஆனால் செய்யவில்லை. மு.க.ஸ்டாலின் செய்யாததை, அமலாக்கத்துறை செய்துள்ளது. பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து பாரதிய ஜனதா சோதனை நடத்தவில்லை, எனக் கூறினார்.

தர்மபுரி எம் பி சிவன் பார்வதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது தொடர்பாக கேட்டபோது, ஈவேரா பெரியாருக்கும், மணியம்மைக்கும் திருமணம் நடந்தது. ஆனால், அவர்களுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. அப்போது, அவர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்திருந்தார்களா..? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

இந்த பேட்டியில் கலந்து கொள்ள வந்த திருச்சி நிர்வாகிகள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பேட்டியின் போது, மாவட்டத் தலைவர் எஸ். ராஜசேகரன், நிர்வாகிகள் ஒண்டிமுத்து, பொன்.தண்டபாணி, லீமா சிவக்குமார், ஸ்ரீராம் சங்கர், வாசன் வேலி சிவக்குமார், இந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.