Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்று கூட்டுறவு வங்கி சம்மேளன தமிழக அமைப்பின் மகளிர் மாநில மாநாடு நடைபெற்றது.

0

 

கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்நாடு அமைப்பின் மகளிர் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடந்தது.

மாநாட்டிற்கு அன்புசெல்வி, உமாமகேஸ்வரி, மீனா ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாநாட்டினை சம்மேளன மாநிலத் தலைவர் தி. தமிழரசு துவக்கி வைத்து கூட்டுறவு வங்கிகளில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கைகளை கூடுதலாக்கி, வரக்கூடிய சூழலில் வங்கியை காப்பதிலும், ஊழியர் உரிமையை காப்பதிலும் பெண் ஊழியர்கள் முன் நின்று செயலாற்ற வேண்டிய அவசியத்தை விளக்கி பேசினார்.

முன்னாள்
சட்டமன்ற உறுப்பினர்
கே.பாலபாரதி
பெண்களின் உரிமைகளையும், அதை பெறவும், அதை பாதுகாக்கவும் போராட வேண்டிய அவசியத்தை விளக்கி பேசினார்.

மகளிர் மாநில கூட்டுறவு வங்கி ஊழியர் ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் கே.ஜெயலட்சுமி வேலை அறிக்கையை வாசித்தார்.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (BEFI) ஒருங்கிணைப்பு குழு சார்பில் எஸ். புவனேஸ்வரி வாழ்த்துரை வழங்கினார்.
மாநாட்டில்
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிர்க்கான 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றிட வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் பாலியல் வன்முறை (தடுப்பு மற்றும் குறை தீர்ப்பு) சட்டம் 2013 ன் படி பாலியல் புகார் கமிட்டி அமைத்திட வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் பெண் ஊழியர்களுக்கான தனிக்கழிப்பறை ஏற்படுத்தித் தர வேண்டும்.
மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து கேரளா மாநிலம் போல் தமிழ்நாடு வங்கி உருவாக்கிட வேண்டும்.

மாநிலத்தில் உள்ள 128 நகர கூட்டுறவுகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து பலப்படுத்திட வேண்டும்.
மத்திய, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில சம்மேளன பொதுச் செயலாளர் இ. சர்வேசன் தொகுப்புரை
யாற்றினார்.
மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக நூற்றுக்கணக்கான பெண் ஊழியர்கள் கலந்து கொண்ட பேரணி நடந்தது.


முன்னதாக
எஸ்.ரமா வரவேற்றார்.
முடிவில் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் டி.ஆர். ரகுராமன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.