Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மகளிர் திட்ட இயக்குனர் மீது அலுவலக பெண்கள் புகார்.நடவடிக்கை எடுப்பாரா ஆட்சி தலைவர்.

0

 

திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் இயக்குனராக பணிபுரிந்து வரும் ரமேஷ் குமார் மீது அவரது அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண்கள் பாலியல் உட்பட பல்வேறு புகார்களை கூறுகின்றனர்.

தினமும் 11 மணிக்கு மேல் பணிக்கு அலவகம் வரும் இவர் கேம்ப் செல்கிறேன் என ஓய்வெடுக்க (மது,ஓசி பிரியாணி) சென்று விட்டு மாலை ஏழு மணிக்கு மேல் அலுவலகம் திரும்பி ஊழியர்கள் வீடு திரும்பும் நேரத்தில் அவர்களுக்கு ஏதாவது வேலை சொல்லி 9 மணிக்கு மேல் வீட்டுக்கு அனுப்புவது.

குறிப்பாக பெண்களை லேட்டாக வேலை முடிந்து அனுப்பியதால் குடும்ப பெண்கள் தங்கள் குழுந்தைகளுக்கு சரியான உணவு கொடுக்க முடியவில்லை,
மேலும் சில பெண்களின் கணவர்கள் கலெக்டரே  ஏழு மணிக்கு வீட்டிற்கு சென்று விடுவார் 10 மணி வரை அலுவலகத்தில் தினமும் வேலை செய்தால் நம்ப முடியவில்லை என கணவன் மனைவிக்குள் தினமும் சண்டையும் ஏற்படுகிறது.

இவரது குடும்பத்தார் கோவையில் வசிப்பதால் இவர் வீட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதால்  அலுவலக ஊழியர்களுக்கு கால தாமதமாக வேண்டுமென்று வேலை இல்லை என்றாலும் தினமும் 9 மணிக்கு மேல் தான் வீட்டுக்கு அனுப்புவார்.

தன்னை அனுசரித்து போகும் பெண்களுக்கு பல சலுகைகள் கிடைக்கும். ஓர் இரு பெண்கள் தங்கள் குடும்ப நிலைக்காக இவரை அனுசரிக்கும் செல்வதாகக் கூறுகின்றனர்.

 

சரியான நேரத்துக்கு பணிக்கு வந்த இவரை அனுசரித்து செல்லாத பெண்ணுக்கு மெமோ அளித்துள்ளார்.

ஒப்பந்த ஓட்டுனர்களை கொத்தடமையாக நடத்துவதாக கூறுகிறார்கள்.

தமிழக அரசால் மகளிர்க்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை பெண்களுக்கு வங்கிகளில் பணம் ஏற்றிவிட்டதாக கூறி பல கிராம பெண்களின் பணத்தையும் ஏப்பம்விட்டு உள்ளார்.

வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி பல லட்சம் பார்த்து உள்ளனர்.

தனக்கு வேண்டிய பிரிண்டர் மூலம் பில்கள் அடித்து பல லட்சம் கையாடல் செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

அலுவலகப் பெண்களிடம் இரட்டை அர்த்தங்களில் பேசுவது பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது என திட்ட அலுவலரை  தொடர்ந்து உதவி திட்ட இயக்குனர் இளங்கோவனும் இவரது பாணியில் செயல்படுகிறார் என பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இவருக்கு பிடிக்காத அலுவலக ஊழியர்களின் படி பணத்தை பல மாதங்களாக தரவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல குற்றச்சாட்டுகள் உள்ளதால் இதனை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மகளிர் திட்ட அலுவலகப் பெண்கள் மற்றும் ஊழியர்களிடம் நேரடியாக விசாரணை செய்தால் உண்மையான நிலை தெரியவரும் என அவர்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.