Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சிவா எம் பி யின் மருமகனை வலை வீசி தேடி வரும் திருச்சி போலீசார்.

0

 

திருச்சி சுப்பிரமணியபுரம் காந்தி தெருவில் வசிக்கும் விஜயசாரதி என்பவரது மனைவி செல்வி, அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில், தனது கணவர் விஜயசாரதியை, கடந்த 5-ம் தேதி திருச்சி சிவாவின் மருமகன் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர், திருச்சி மேற்கு தாலுக்காமில் சிலருடன் இணைந்து கடுமையாக தாக்கியதாகவும், அதில் மயக்கம் அடைந்த விஜயசாரதி திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், மயக்கம் தெளிந்த பிறகு தனக்கு நடந்த விவரத்தை தெரிவித்திருந்தார். .

மேலும் இது குறித்து யாரிடமும் முத்துக்குமார் பெயரைச் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அவர் புகாரில் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் கடந்த 13-ஆம் தேதி அன்று முத்துக்குமார் உட்பட நான்கு பேர் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் பேரில் அவர்களை கைது செய்ய போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முத்துக்குமார், உட்கட்சி பிரச்சினை காரணமாக தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,

இருசக்கர வாகனத்தைத் திருடியவரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றபோது தானும் உடன் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். எந்த முகாந்திரமும் இல்லாமல் தன்மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த விவகாரம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயசாரதி மேற்கு தாலுகா அலுவலகம் வாயிலில் கராத்தே முத்துக்குமார் வைத்து இருக்கும்  ஆவின் டீக்கடையில் தேநீர் அருந்துவதற்காக கடையின் முன்பு வாகனத்தை நிறுத்தி உள்ளார்,ஓரமாக வாகனத்தை வைக்க கூறியுள்ளார் முத்துக்குமார்,.இதில் வாய் தகராறு ஏற்பட்டு முத்துக்குமார் தனது நண்பர்களும் சேர்ந்து விஜயசாரதியை கொலை வெறியுடன் தாக்கியுள்ளார்.

தகவல் வெளியே பரவியதால் இரு சக்கர வாகன திருடன் என விஜய சாரதி மீது பொய் புகார் அளித்துள்ளார். (விஜய் சாரதி மீது இதுவரை எந்த வழக்குகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)

Leave A Reply

Your email address will not be published.