Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: எஸ் எஸ் எல் சி பொது தேர்வில் 94.28% மாணவர்கள் தேர்ச்சி.

0

 

திருச்சி மாவட்டத்தில்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 94.28 சதவீத மாணவர்கள் தேர்ச்சி.

2022-23ம் கல்வி ஆண்டிற்கான
10ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது.
திருச்சி, லால்குடி, முசிறி உள்ளிட்ட 3கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வினை 449பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர்கள் மற்றும்
தனித்தேர்வர்கள் என 172மையங்களில் 16,737 மாணவர்களும், 17,032மாணவிகளும் என மொத்தம் 33,769 மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வினை
எழுதினர்.
கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்
தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது.
இதில் திருச்சி மாவட்டத்தில் 94.28
சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் 15,325 மாணவர்களும் 16 ஆயிரத்து 513 மாணவிகளும் என மொத்தம்
. 31,838 பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது94.28சதவீதம் ஆகும்.
இது கடந்த ஆண்டு விட 2.03சதவீதமாகும்.

இதில் 52 அரசு பள்ளிகள், 8 ஆதிதிராவிட நலப் பள்ளிகள், 3 பழங்குடியினர் நலப் பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11 பகுதி உதவி பெறும் பள்ளிகள், 64 மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 144 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.