திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தென்னரசு,இவரது
மகன் கரிகாலன் (வயது 35).இவர் 23 வயது பெண்ணை காதலித்து ஏப்ரல் மாதத்தில் திண்டுக்கல் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும் உறையூரில் உள்ள வீட்டில் இருந்து வந்தனர். இந்த நிலையில் மே மாதம் திருமண வரவேற்பு விழா நடத்த கரிகாலனின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வந்தனர். இந்த நிலையில் திருமண வரவேற்பு பத்திரிக்கை அடித்து நண்பர்களுக்கு கரிகாலன் கொடுத்து வந்தார்.இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த புதுப்பெண் திடீரென்று மாயமாகிவிட்டார்.இது குறித்து கரிகாலன் பல இடங்களில் புதுப்பெண்ணை தேடி உள்ளார்.எங்கும் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து கரிகாலன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தன்னுடைய மனைவி காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார்.புகாரின் பேரில் உறையூர் போலீஸ் வழக்குப் பதிவு செய்து புதுப் பெண்ணை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
திருச்சி மாவட்டம் முசிறி தாத்தையங்கார் பேட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் அருள்குமார் (வயது 33)இவர் தனியார் லைப் இன்சூரன்ஸ் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் கடன் சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்த அருள்குமார் வீட்டில் இருந்து கம்பெனிக்கு செல்கிறேன் என்று கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. விடை.இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு சென்று பார்த்தபோது அங்கும் வரவில்லை என்று அதிகாரிகள் கூறினார். இது குறித்து அவரது மனைவி சந்தியா செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்தார்