Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாசன வாய்க்கால் செல்லும் பொது பாதையை மீட்க கோரி ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக் தலைமையில் கிராம மக்கள் மனு.

0

 

 

திருச்சியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.

புங்கனூர் ஊராட்சி ஒன்றிய அதிமுக கவுன்சிலர் கார்த்திக் தலைமையில் கிராம மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

நாங்கள் புங்கனூர் கிராமம் புதுத்தெருவில் சுமார் நூறு ஆண்டு காலமாக வசித்து வருகிறோம்.

எங்கள் பகுதியுள்ள உருண்டை மழைநீர்,எங்கள் 150 குடும்பங்களில் கழிவு நீர், பஞ்சாயத்து கழிவுநீர், வாய்க்கால் சுமார் மற்றும் எங்களின் விவசாய நிலத்தின் பாசன வாய்க்கால் ஆகியவை அனைத்தும் எங்களின் தெரு வழியாக சென்று கொண்டிருந்தது.

இவை அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தெருக்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் கொசுத்தொல்லை தாங்காமல் நாங்களும் அருகிலுள்ள பள்ளி குழந்தைகளும் அவதிப்பட்டு வருகிறோம். நாங்கள் விவசாய நிலத்திற்கு செல்லக்கூட வழியில்லாமல் தவித்து கொண்டிருக்கிறோம். தாங்கள் இதை ஒரு மனுவாக எண்ணாமல் எங்கள் மீது சிறிய கருணை காட்டி எங்களுக்கும் ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி அளித்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.