திருச்சி:தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் விடுப்பு போராட்டம் நடத்த முடிவு.
தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருச்சியில் தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம், பதிவுத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம், பதிவுத்துறை அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கம் ஆகியவற்றின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.
ஏற்கனவே பதிவுத் துறை பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 14 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், மார்ச் 26 அன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது.
ஆனால் அதன் பிறகும் பதிவுத்துறை ஆனது சங்கங்களை அழைத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவது சம்பந்தமாக எந்த வித உத்தரவாதமும் இதுவரை தரவில்லை.
இந்நிலையில் கடந்த மே இரண்டாம் தேதி பதிவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசினோம். அப்போது அமைச்சர் விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளார்கள்.
மேற்படி கோரிக்கைகளை அமைச்சர் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறோம்.
இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் மே 31 ஆம் தேதிக்குள் பிஏசிஎல் உள்ளிட்ட தற்காலிக பணியிடை நீக்கத்தில் உள்ள அனைத்து பணியாளர்களையும் உடனடியாக பணியில் அமர்த்தல்,
பதிவு சட்டப்பிரிவு 22 22 ஏ 2 க்கான தெளிவுரை வழங்குதல்,
சனிக்கிழமை வேலை நாளை ரத்து செய்தல்,
பொது பணியிட மாறுதல், தகுதி காண் பருவம் நிறைவு செய்த ஆணை பிறப்பித்தல், இளநிலை உதவியாளர் நிலையிலிருந்து உதவியாளர் பதவி உயர்வு ஆணை பிறப்பித்தல், மூன்றாம் மொழி தேர்வினை ரத்து செய்தல்,
சட்டப்பூர்வ பணியினை செய்யும் அலுவலர்கள் மீது FIR பதிவு செய்வதை தடுக்க கோரி ஏற்கனவே உள்ள ஆணையினை டிஜிபி அவர்களுக்கு மீண்டும் பரிந்துரைத்தல், உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தராவிட்டால் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த கூட்டு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.