திருச்சி அண்ணாமலை நகரில் செயல்பட்டு வரும் முகேஷ் ஆர்த்தோ கேர் மருத்துவமனையின நிர்வாக இயக்குனரும், தலைமை மருத்துவருமான டாக்டர் முகேஷ் மோகனின் தீவிர முயற்சியால் முழங்கால் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை நவீன ரோபாட்டிக் முறையில் காணொளி வாயிலாக முகேஷ் ஆட்டோ கேர் மருத்துவமனையில் இருந்து திருச்சி பழைய சங்கம் ஓட்டலில் மிக பிரமாண்டமான வகையில் ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களும், மயக்கியவியல் மருத்துவர்களும், பிறதுறை மருத்துவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
நேற்று காலை 8 மணி முதல் மாலை5 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு எலும்பு மருத்துவர்கள் சங்க செயலாளர் மருத்துவர் ரவி மற்றும் முன்னாள் தலைவர் மருத்துவர் வனசேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவர்கள், மூட்டு அறுவை சிகிச்சையில் ஆர்வம் கொண்ட இள முட நீக்கிய மருத்துவர்களுக்கு எவ்வாறு ரோபாட்டிக் முறையில் அறுவை சிகிச்சை செய்வது என்பதற்கான பயிற்சி முறைகளும் கற்றுவிக்கப்பட்டது.
முடிவில் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உறுதுணையாக இருந்த மருத்துவமனை ஊழியர்கள்,திருச்சி எலும்பு மருத்துவ சங்க உறுப்பினர்களுக்கும் டாக்டர் முகேஷ் மோகன் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.