Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் பெண் குறித்து ஏமாந்த பாஜக நிர்வாகி பேட்டி.

0

 

 

ஆண்களிடம் உல்லாசமாக இருந்து ஏமாற்றி பணம் பறிக்கும் பெண். பாதிக்கப்பட்ட பிஜேபி நிர்வாகி ஜெயராம் பாண்டியன் பேட்டி:-

திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அரியமங்கலம் பகுதி மண்டல துணைத் தலைவர் ஜெயராம் பாண்டியன் என்பவர் பத்திரிக்கையாளர் சந்தித்து அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் நானும் எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். தற்போது போர்வெல் வாகனம் வைத்து எனது வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறேன். மேலும் பிஜேபியின் அரியமங்கலம் மண்டல துணைத் தலைவராக உள்ளேன்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செந்தண்ணீர்புரம் பகுதியைச் சேர்ந்த மைதிலி என்ற பெண்ணுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியாக வாடகைக்கு ஒரு வீடு எடுத்து நானும் மைதிலியும் ஒன்றாக வசித்து வந்தோம்.

ஏமாற்று பெண்மணி மைதிலி.

 

இந்நிலையில் மைதிலி அவருடைய நண்பரான ராம்குமார் என்பவருடன் எனது வீட்டில் இருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னை சென்றுவிட்டனர். நான் சென்னை சென்று மைதிலியை சமாதானம் செய்து மீண்டும் அழைத்து வந்து அவருடன் மூன்று மாதங்களாக குடும்பம் நடத்தி வந்தேன்.

கடந்த மாதம் 25ஆம் தேதி ராம்குமார் மற்றும் மைதிலி ஆகியோர் நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது வீட்டில் இருந்த 7 லட்சம் ரூபாய் பணத்தையும் 8 பவுன் நகையையும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர்.

இதுகுறித்து விசாரித்தபோது மைதிலிக்கு ஏற்கனவே பல ஆண்களுடன் திருமணம் ஆனது பல நபர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் மைதிலி மற்றும் அவரது ஆண் நண்பர் ராம்குமார் ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து என்னிடமிருந்து திருடிய பணம் மற்றும் நகையை திரும்ப பெற நேரில் சென்னை சென்று கேட்டேன்.

இதனால் மைதிலி அவரது நண்பர் ராம்குமார் இவரின் தாயார் சிவகாமி ஆகியோர் என் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மார்பில் செய்து படங்கள் அனுப்பியதாக பொய் புகார் அளித்தனர்.

புகார் அளித்த சிவகாமி அவரது மகன்களுடன்.

 

 

மேலும் 10 லட்சம் பணம் மற்றும் 8 பவுன் நகையை கேட்டு மீண்டும் சென்னை வந்தால் என் மனைவி மற்றும் குழந்தைகளை ஆள் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார் சிவகாமி.

என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் கடந்த மாதம் 29ஆம் தேதி பொன்மலை காவல் நிலையத்தில் என் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு, என்னிடமிருந்து திருடி சென்ற 10 லட்சம் பணம் மட்டும் 8 பவுன் தங்க நகை மீட்டுத் தரும்படியும், கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி பொன்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்.

மேலும் மைதிலி மற்றும் அவரது நண்பரான ராம்குமார் ஆகியோர் மூலம் இனி எந்த அப்பாவி ஆண்களும் ஏமாற கூடாது என்பதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தேன் என ஜெயராம் பாண்டியன் கூறினார்.

(மைதிலி பல ஆண்களுடன் உள்ள சான்றிதழ்கள்,
மைதிலிக்கு வைர மூக்குத்தி வாங்கிய சான்று,சிவகாமி ஜெயராம் பாண்டியனை மிரட்டிய ஆடியோக்கள்,பொன்மலைக் காவல் நிலையத்தில் பதியப்பட்ட எஃப் ஐ ஆர் காப்பி மற்றும் அனைவருக்கும் சான்றாக புகைப்படங்களை நிருபர்களிடம் காண்பித்தார் ஜெயராம் பாண்டியன்.)

Leave A Reply

Your email address will not be published.