Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 6 பேர் அதிரடி கைது.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சியில் கஞ்சா லாட்டரி
விற்ற 6 பேர் கைது

TVK ad

திருவரங்கம், பாலக்கரை பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது கஞ்சா விற்றதாக திருவானைக்காவல் சேர்ந்த சூரியகுமார், பாலக்கரையைச் சேர்ந்த முரளி ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் திருவரங்கம், பாலக்கரை, தில்லை நகர் ஆகிய பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக ஜெகன், ஆரோக்கியம், பிரபாகரன், இப்ராம்ஷா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6,750 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.