
குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம் பெண் தற்கொலை.
.
திருச்சி துவாக்குடி பெல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கும் புதுக்கோட்டை கீரனூர் மேல புதுவயல் வெள்ளாளர் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 22) என்பவருக்கும் கடந்த 2020 மார்ச் மாதத்தில் திருமணம் நடந்தது.
திருமணமாகி 3 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் குழந்தை பாக்கியம் இல்லை.
இதனால் ராஜேஸ்வரி மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறி கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜேஸ்வரியின் தந்தை சரவணன் துவாக்குடி போலீஸ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இளம் பெண் சாவுக்கு வரதட்சணை கொடுமை ஏதும் காரணமா?
என்ற கோணத்தில் திருச்சி உதவி கலெக்டரும் விசாரணை நடத்தி வருகின்றார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம் பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.