தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக 2 – வது உள் மண்டல ஒத்திசைவு கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் தொடங்கியது.
இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை நிதி ஆலோசகர் மற்றும் முதன்மை கணக்கு அலுவலர் மணி வாசகன் தலைமை வகித்து கூட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் திருச்சி மண்டல மேலாளர் பாலமுருகன். தர கட்டுப்பாட்டு மேலாளர், போக்குவரத்து முதுநிலை மேலாளர், கணக்கு முதுநிலை மேலாளர் உட்பட 38 மண்டத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் நாளையும் தொடர்ந்து நடைபெற உள்ளது.