Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நெ.1.டோல்கேட் அற்புதக் குழந்தை இயேசு திருத்தல பங்கு ஆண்டு திருவிழா.

0

 

அற்புத குழந்தை இயேசு திருத்தல பங்கு ஆண்டு திருவிழா.

குடந்தை மறைமாவட்டம், நெ.1 டோல்கேட் அற்புத குழந்தை இயேசு திருத்தல பங்கு ஆண்டு திருவிழா நாளை 04.05.2023 முதல் 07.05.2023 வரை நடைபெறுகிறது.

04.05.2023 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு குடந்தை ஆயர் ஆயர்.அந்தோணிசாமி தலைமையில் நற்கருணை ஆலயம் & லூர்து அன்னை கெபி புனிதப்படுத்துதல் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பிறகு திருப்பலி நிகழ்ச்சி ஆயர்.அந்தோணிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

திருப்பலி சிறப்பிப்போர் ஓசேயா, யோவேல், செக்கரியா அன்பியங்கள் மற்றும் வின்சென்ட் தே பால் சபையினர்.

05.05.2023 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு திருப்பலி அருட்தந்தை. சுவக்கின், பங்குத்தந்தை, கொன்னைக்குடி, அருட்தந்தை.
அல்போன்ஸ், இயக்குநர், சகாயமாதா மருத்துவமனை, புள்ளம்பாடி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.

திருப்பலி சிறப்பிப்போர் நாகூம், ஆகாய், மலாக்கி அன்பியங்கள் மற்றும் இளையோர் இயக்கம்.

ஆடம்பர தேர்பவனி & நற்கருணை ஆசீர் (06.05.2023

06.05.2023 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு திருப்பலி பேரருட்திரு. அமிர்தசாமி, மறைமாவட்ட முதன்மை குரு தலைமையில் நடைபெறுகிறது.

திருப்பலி சிறப்பிப்போர் யோனா, ஓபேதியா, ஆமோஸ் அன்பியங்கள் மற்றும் பங்குபேரவையினர்.

திருப்பலி முடிவுற்ற பிறகு இரவு 8.00 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. நற்கருணை ஆசீர் முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறுகிறது.

திருவிழா திருப்பலி & கொடியிறக்கம் (07.05.2023) 07.05.2023 ஞாயிறு காலை 8.00 மணிக்கு திருவிழா திருப்பலி மற்றும் கொடியிறக்கம் பேரருட்திரு.பீட்டர் ஆரோக்கியதாஸ். மறைவட்ட முதன்மை குரு, இலால்குடி தலைமையில் நடைபெறுகிறது.

திருப்பலி சிறப்பிப்போர் மீக்கா. செப்பனியா, அபகூக் அன்பியங்கள் மற்றும் மரியாயின் சேனையாளர்கள்.

நெ.1 டோல்கேட் நகரில் வீற்றிருந்து நாடிவருவோருக்கெல்லாம் குழந்தைவரமும், ஆறுதலும், அருளாசியும் வழங்கும் பங்கின் பாதுகாவலரான அற்புத குழந்தையேசுவின் ஆண்டுத்திருவிழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்திட நவநாட்களிலும், கூட்டுப்பாடற் திருப்பலியிலும் பங்குகொண்டு இறையாசீர் பெற குடும்பமாய் வாருங்கள் என அருட்தந்தை முனைவர்.ஆரோக்கியசாமி, பங்குத்தந்தை மற்றும் அருட்சகோதரிகள், பங்கு பேரவை. இறைமக்கள் ஆகியோர் தெரிவிக்கின்றனர்,
என
எஸ்.ஜீசஸ்விக்டர் பத்திரிகை குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.