Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:கடைசி தேர்வு எழுதிவிட்டு கம்பி நீட்டிய பிளஸ் 2 மாணவி

0

'- Advertisement -

 

Ad banner

பிளஸ் 2
கடைசி தேர்வு எழுதிவிட்டு கம்பி நீட்டிய மாணவி

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி இந்த மாதம் 3-ம் தேதி நிறைவடைந்தது.

TVK ad

இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி வழக்கம் போல் காலையில் 9:00 மணிக்கு தேர்வு எழுதச் சென்ற துவாக்குடி பகுதி மாணவி மாயமானார்.

துவாக்குடி தென்மலை எம்.டி. ரோடு பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி அண்ணா ஆர்ச் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பின்னர் வழக்கம்போல் 3-ம் தேதி தேர்வு எழுத பள்ளிக்கு புறப்பட்டு சென்ற மாணவி மாலை வீடு திரும்பவில்லை.
பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். தோழிகளிடமும் விசாரித்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

கடைசி தேர்வை எழுதிவிட்டு மாயமாகி இருக்கின்ற காரணத்தால் காதல் வலையில் சிக்கி அவர் காதலனுடன் கம்பி நீட்டி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் தாய் துவாக்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.