Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பெரிய வணிகர்களின் கைக்கூலி கோவிந்தராஜுலு. மனிதநேய அனைத்து வர்த்தக நல சங்கத்தின் பொதுச் செயலாளர் அஷ்ரப்அலி

0

 

மனிதநேய அனைத்து வர்த்தக நல சங்கத்தின் திருச்சி மாவட்ட பொது செயலாளர் அஷ்ரப் அலி, பாலக்கரை பகுதியில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம், என்.எஸ்.பி. சாலை, தெப்பக்குளம், பெரிய கடை வீதி, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறு வியாபாரிகள் தரைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். மேலும் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறும் இன்றி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த கடைகளை நம்பியே அவர்களது வாழ்வாதாரம் உள்ளது.

இந்நிலையில் தரைகடை வியாபாரிகளால் பொது மக்களுக்கு ஆபத்து உள்ளதாகவும், தரக்கடைகளுக்கு அனுமதி வழங்க கூடாது எனவும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் பொது செயலாளர் கோவிந்தராஜுலு திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

தரைக்கடை வியாபாரிகளுக்கு என்.எஸ்.பி சாலை பகுதியில் வியாபாரக் குழு அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை பொறுத்து கொள்ள முடியாமல் தரைக் கடைகளுக்கு இடம் ஒதுக்க கூடாது என பெரிய வணிகர்களின் கைக்கூலியாக கோவிந்தராஜுலு செயல்பட்டு வருகிறார். அவர் இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மேலும் தரைக்கடை வியாபாரிகளை முறையாக கணக்கெடுக்க வேண்டும் என மாநில அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளோம். தமிழக முதல்வர் கருணை உள்ளம் கொண்டு தரைக்கடை வியாபாரிகள் ஆண்டாண்டு காலமாக கடை நடத்தி வந்த இடத்தில் அவர்கள் கடை நடத்த அனுமதி வழங்க வேண்டும். சிறிய வியாபாரிகளை வஞ்சிக்காத வண்ணம் மாநகராட்சி மேயர், ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் எம்ஏ முகமது ராஜா, மமக மாவட்ட செயலாளர் அஷரப் அலி
மாவட்ட பொருளாளர் காஜாமைதீன்
மாவட்ட துணைத் தலைவர் மு.சையது முஸ்தபா , மாவட்ட துணை செயலாளர் முகமது காசிம் ரஹ்மத்துல்லா வர்த்தக சங்க மாவட்ட செயலாளர் அன்சாரி வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் சிப்பாய்ப்துல்லா
பகுதி செயலாளர் சீனி
மற்றும் நிர்வாகிகளும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.