Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மகன் வேலைக்கு ஆபத்து என்பதால் ஜாக்கெட்டை கிழித்துக்கொண்டு ஓடிய தாய் ….. (பரபரப்பு வீடியோ இணைப்பு) சொத்து தகராறில் கொலைவெறித் தாக்குதல்? காவலர் மீது  புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க தயங்கும் தவெக அரசு ….

0

'- Advertisement -

Ad banner

சொத்து தகராறில் கொலைவெறித் தாக்குதல்? காவலர் மீது  புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க தயங்கும் தவெக அரசு ….மகன் வேலைக்கு ஆபத்து என்பதால் ஜாக்கெட்டை கிழித்துக்கொண்டு ஓடிய தாய் ….. (பரபரப்பு வீடியோ இணைப்பு)

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா ஆவணம் பஞ்சாயத்து   துலுக்க விடுதி தெற்கு  கிராமத்தை  சேர்ந்தவர்  காமராஜ் (வயது 52) இவர் கடந்த 3.09.2026, அன்று இரவு வீட்டில்  தனியாக இருந்த போது, அதே  ஊரை சேர்ந்த  வீரப்பன் மகன்  குழந்தைவேல்  (வயது 40), என்பவரும்,  சுப்பிரமணியன் மகன் காவலர்  பாதாகுமார்  (வயது 35)  என்பவரும் சேர்ந்து  சொத்து  பிரச்னை காரணமாக, சுமார் பத்துக்கு மேற்பட்ட அடியாட்களுடன்  காமராஜ் மீது  கொலை வெறி தாக்குதல் நடத்தியயுள்ளதாக  கூறப்படுகிறது.

இந்த நிலையில் தாக்குதலுக்கு ஆளான காமராஜ் அன்று இரவே திருச்சிற்றம்பலம் போலீசார் அறிவுறுத்தலின்படி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு

திரும்பி உள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் தாக்குதல் நடத்திய பாதக்குமார் புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குழந்தைவேலு தலைமறைவாகி வெளி நாட்டிற்கு தப்பி சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் தமிழக வெற்றிக்கழக அரசின் காவல்துறையினர் காவலர் பாதகுமார், குழந்தைவேலு மற்றும் அவர்களுடன் வந்த அடியாட்கள் யார் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த மாதம் 17 ம் தேதி சர்வேயர் அளவிட்டு போன இடத்தில் காமராஜ் மற்றும் பாஸ்கர் தரப்பினர் கல் நட சென்றபோது அப்போது அங்கு வந்த காவலர் பாதகுமாரின் தாயார் அஞ்சம்மாள் என்பவர் கத்தி கூச்சலிட்டபடியே கண்டபடி அசிங்கமாக, ஆபாசமாக பேசியிருக்கிறார், மேலும் பாஸ்கர் என்பவரை சொட்டபயலே…. என்று உருவகேலி செய்ததோடு, காமராஜ் மற்றும் பாஸ்கர் தரப்பினரிடம் தகராறு செய்தபடியே இருந்திருக்கிறார். ( வீடியோ இணைக்கப்பட்டுள்ளது) பின்னர் திடீர் என்று தன் ஜாக்கெட்டை கிழித்துகொண்டு கத்தி ஓடியபடியே, பாஸ்கர் மற்றும் காமராஜ் தரப்பினர் மீது பொய்யான புகாரை திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அஞ்சம்மாள் ஏற்கனவே காமராஜ் தரப்பினர் கொடுத்த முதல் புகாருக்கு ஒரு கவுண்டர் பெட்டிஷன் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் காமராஜ் தரப்பினர் கொடுத்த முதல் புகாரால் தன் மகன் பாதகுமாரின் வேலைக்கே சிக்கல் ஆகிவிடும் என்பதால் தான், அஞ்சம்மாள் யார் சொல்லியோ தான் இந்த நாடகத்தை நடத்தியதாக சொல்கிறார்கள். அதேபோல் அஞ்சம்மாள் ஜாக்கெட்டை கிழித்தபடி மருத்துவமனைக்கு ஓடியபோது பேராவூரணி மருத்துவமனை நிர்வாகத்தினர் அஞ்சம்மாள் நாடகத்தை நம்பாமல் விரட்டி விட்டு விட்டார்களாம்.

 

அதேபோல் திருச்சிற்றம்பலம் காவல்துறையினரும் இதுவரை பாதகுமாருக்கு சாதகமாகத்தான் செயல்பட்டு ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக முதலில் நியாயமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் பின்னர் என்ன நிர்பந்தத்தாலோ அப்படியே பாதகுமாருக்கு ஆதரவாக பேச ஆரம்பத்திவிட்டாராம். இந்த நிலையில் இந்த விசாரணையை டி.எஸ்.பியோ அல்லது தஞ்சை மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் ஆகியோர் தான் விசாரணை செய்து காவலர் பாதகுமார் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஆவணம் பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 ஒரு காவலரே சொந்த சொத்து பிரச்சனை காரணத்திற்காக கூலிப்படையை வைத்து தன் சொந்த உறவினரையே கொலை வெறி தாக்கல்  நடத்திய இந்த  சம்பம் தஞ்சை மாவட்டம்  பேராவூரணி  மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர் காவலர் என்பதால் நடவடிக்கை எடுக்க தயங்குகிறதா தமிழக வெற்றி கழக அரசு காவல்துறை என அப்பகுதி மக்கள் கேள்வி கேட்டு உள்ளனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.