Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தற்போதைய முறையால் தெரு நாய்களை கட்டுப்படுத்த முடியவில்லை. மாநகராட்சி கூட்டத்தில் 47 வது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன் பேச்சு

0

 

2023-24ம் ஆண்டிற்கான
திருச்சி மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்.

திருச்சி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் மு. அன்பழகன் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் கமிஷனர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு
அம்பிகாபதி (அதிமுக):
எனது வார்டுக்கு உட்பட்ட வயர்லெஸ் ரோடு முஸ்லிம் தெரு, மாரியம்மன் தெரு,அழகர் தெரு உள்ளிட்ட இடங்களில் 40க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் பொதுமக்கள் மனைகளை கிரையம் செய்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது திடீரென அந்த நிலம் காலரா கேம்ப் நிலம், அதனை மீண்டும் பத்திரப்பதிவு செய்ய இயலாது என அரசாணை வந்துள்ளதாக சொல்கிறார்கள். ஆகவே இது குறித்து மாநகராட்சி மூலமாக மாவட்ட நிர்வாகி அதிகாரிக்கு தெரிவித்து கிரயம் செய்ய அனுமதி பெற வேண்டும்.
மேயர் அன்பழகன்
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

எல் ஐ சி சங்கர் (சுயேட்சை):-
கோடை காலம் தொடங்கி விட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனை சரி செய்யும் வகையில் கூடுதலாக ஒரு மணி நேரம் குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோடை காலத்தில் பள்ளி குழந்தைகள் மாலை நேரத்தில் குளிக்கும் வகையில் சம்மர் பீச் திருவரங்கம் காவிரி ஆற்றில் அமைக்க வேண்டும்.

காஜாமலை விஜி :-
எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. கொசு மருந்துனுடைய தரத்தினை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்
மேயர் அன்பழகன்
மாநகர சுகாதார அலுவலர் மூலம் மருந்தின் தரம் ஆய்வு செய்யப்படும்.

இந்த மாநகராட்சி கூட்டத்தில் மாநகராட்சி பகுதியில் அடுத்த 20 ஆண்டுகளுக்கான சாலை பொது போக்குவரத்து, மோட்டார் அல்லாத போக்குவரத்து மேம்பாடுகள் இயக்கம் மற்றும் சரக்கு போக்குவரத்து மேலாண்மை, திட்டங்கள் கொண்டு பல்வேறு போக்குவரத்து திட்டங்கள் குறித்த ஆய்வு அறிக்கை தொடர்பாக கவுன்சர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

இதில் சமயபுரம் முதல் வயலூர் வரையிலும் துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரையிலும் திருச்சி ஏர்போர்ட் வழியாக பஞ்சபூர் வரையிலும் மெட்ரோ ரெயில் போன்று பூமிக்கு அடியிலோ அல்லது பறக்கும் சாலை திட்டத்தின் படியோ புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை நகராட்சி நிர்வாக இயக்குனர் அகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் சில ஆய்வுகளுக்கு பின்னர் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசின் அனுமதி பெற்று புதிய பொது போக்குவரத்து திட்டங்கள் அமலாக்கம் செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் தெரிவித்தார்.
47வது வார்டுஅம்மா மக்கள் முன்னேற்ற கழக கவுன்சிலர் செந்தில்நாதன்:
தற்போதைய முறையால் தெரு நாய்களை கட்டுப்படுத்த முடியவில்லை மாற்று வழிகளை மாநகராட்சி கண்டறிய வேண்டும் என பேசினார்.

பிரபாகரன் விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்பேத்கர் எழுதிய நூல்களை தமிழில் மொழி பெயர்க்க ரூபாய் ஐந்து கோடி நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை, மேலும் எனது வாடுக்கு உட்பட்ட இ.பி.ரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய லாரி டெர்மினல் டெண்டர் தொகை அதிகமாக இருப்பதால் யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை ஆகவே அந்தத் தொகையினை குறைத்து நிர்ணயிக்க வேண்டும். இபி ரோடு பகுதியில் கனரக வாகனங்கள் மற்றும் கண்டெய்னர்கள் ஆக்கிரமித்து இருக்கின்றன இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இவ்வாறு பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. பிறகு தொடர்ந்து மதியம் திருச்சி மாநகராட்சியின் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
.இதில் புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.இதன் பட்ஜெட் விவாத கூட்டம் விரைவில் நடைபெறும்.

Leave A Reply

Your email address will not be published.