Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி என் ஐ டி கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்பு.

0

 

திருவெறும்பூர் அருகே உள்ள
என்ஐடி கல்லூரியில் நடந்த மகளிர்
தின நிறைவு நாள் விழாவில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா அளுனர் தமிழிசை
சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.

திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி ஐ கல்லூரி மகளிரியல் துறை சார்பில்
கடந்த 6ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது.

நிறைவு நாளான நேற்று நடந்த விழாவிற்கு கல்லூரி இயக்குனர் அகிலா தலைமை
வைத்தார். கல்லூரி பதிவாளர் தாமரைச்செல்வன், மகளிர் துறை தலைவர் சுப்பையா
ஆகியோர் முன்னிலையில் வைத்தனர்.

பாண்டிச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டு மகளிர் தின விழாவில் நடந்த போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:

பெண்கள் தொடங்காத துறையே இல்லை பெண்கள் கால் பதிக்காத இடமும் இல்லை
தொழில்நுட்பம் ஆண் பெண் சமம் என்பது போல் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான்
கொரொனாவிற்கு பிறகு ஆன்லைன் மூலம் ஊறுகாய், சேலை உள்ளிட்ட பொருட்களை
பெண்கள் ஆண்லைனில்
விற்பனை செய்து வருகின்றனர்.
கோவிட் காலத்தில் கணவனுக்கு வேலை இல்லாத காலங்களில் இது பேரு உதவியாக இருந்தது

இதை தான் பாரத பிரதமர் இணையதளம் டெக்னாலஜியை பயன்படுத்துங்கள் என்று
கூறுகிறார் ஜிபே, ரூபே

நாட்டின் அரசியல் அமைப்பை ஏற்படுத்திய அம்பேத்கரின் மீது நம்பிக்கை
உள்ளவர்கள் இணைய வழி வர்த்தகத்திற்கு உரிய செயலியாக பி ஆப் என்ற செயலி
தொடங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது மீன் விற்கும் பெண் கூட இணைவளியை மூலம் பணவரவு செலவு செய்து
வருகிறார்.

ஆனால் இது போன்ற தொழில்நுட்ப கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் அதை
தங்களது வாழ்க்கையில் எத்தனை பேர் பண்பாட்டுகிறார்களா என்பது
கேள்விக்குறியாக உள்ளது

குறுகிய கால நேரத்தில் வேலை செய்ய குடும்ப பெண்கள் வாட்ஸ் அப் மட்டும்
பார்த்தால் போதாது கம்ப்யூட்டரையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
கொரோனா காலத்தில் அது உங்களுக்கு எந்த அளவு உதவியது அது போல் உதவும்
இது போன்ற கொரோனா காலத்தில்
என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கூட
ஆன்லைன் வகுப்பு நடைபெற்றது.

கொரோனா காலத்தில் பெண்கள் மருத்துவராக, செவிலியராக, உள்ளிட்ட பல்வேறு
துறையில் பணியாற்றினார்கள் மேலும் குடும்பத்தில் சேமிப்பது வைத்தார்கள்

தனது கணவர் சிறுநீரக மருத்துவராக இருப்பதாகவும் கணவருக்கு சிறுநீரகம்
பாதிக்கப்பட்டால் 90% பெண்கள் தங்களது சிறுநீரகத்தை தருவதற்கு
முன்வருவதாகவும் ஆனால் அதுவே பெண்களுக்கு பாதிக்கப்பட்டால் ஆண்கள் வேறு
பெண்ணை பார்த்துச் சென்று விடுவார்கள் என்றும் இது புள்ளி விவரமாக உள்ளது.
ஆண்களுக்கும் தியாக உணர்வு வர வேண்டும் மகளிர் தினத்திற்காக இதை நான்
சொல்லவில்லை

படிக்கும் பொழுது கட்டுரை எழுத வேண்டும், பணம் சம்பாதிப்பதற்கு சுய
தொழில் ஏதாவது செய்ய வேண்டும். பெண்கள் முன்னேற வேண்டும்

பெண்கள் மகிழ்ச்சியாக இருங்கள் மகிழ்ச்சிக்காக எதையும் தொலைக்காதீர்கள்
கண்ணீர் வடிக்காதீர்கள் சீரியல் பார்க்கும்போது கூட.

நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும் பெண்கள் முன்னேற்றத்திற்கு ஆண்கள்
துணை புரிய வேண்டும் என்றார்.

இந்த விழாவில் என்ஐடி மகளிர் இயல் துறை பேராசிரியர்கள் மாணவ மாணவிகள்
மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள், துறை தலைவர்கள் என பலரும் கலந்து
கொண்டனர்.

முன்னதாக மகளிர் பிரிவு தலைவி வேல் மதி வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.