Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் எக்ஸெல் குழும விருதுகளை தலைவர் முருகானந்தம் வழங்கினார்.

0

திருச்சி கண்ட்டோண்மெண்டில் உள்ள கோர்ட்யார்ட் மாரியாட் ஹோட்டலில் வள்ளி 2023 மற்றும் எக்ஸெல் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

எக்ஸெல் குழுமம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக எக்ஸெல் குழும தலைவர் முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்:-

எனது தாயார் மரகதவல்லி மருதையன் நினைவு நாளை முன்னிட்டு எக்ஸெல் ஹெல்த் கேர் திட்டத்தின் கீழ் பிரத்தியேகமான கேன்சர் நோயாளிகளுக்கான சிறப்பு எக்ஸ்எல் ரோட்டரி திருச்சி கேன்சர் கேர் ஃபவுண்டேஷன் அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் நடைபெற்றது.

எக்ஸெல் குழுமத்திற்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தில் முதல் கட்டமாக 5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கேன்சர் மருத்துவமனை ரூ.60 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது 2 ஏக்கரில் கட்டுமான பணிகள் நேற்று முன்தினம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த மருத்துவமனையில் நலிவுற்ற பொதுமக்களுக்காக 75 படுக்கை வசதி கொண்ட சிறப்பு மருத்துவமனையாக இது செயல்படும்.

மேலும் அனைத்து வகையான ஸ்கேன் கருவிகள் பரிசோதனை கருவிகள் இங்கு இடம் பெறும். எதிர்காலத்தில் சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம், டாட்டா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.

அதேபோல் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் ஹைடெக் மருத்துவமனையாக இது செயல்படும். திருச்சியை சேர்ந்த மருத்துவர்கள் மட்டுமின்றி தலை சிறந்த மருத்துவர்கள் இங்கு பணியாற்றுவார்கள். வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த மருத்துவமனை செயல்பட தொடங்கும். மேலும் சமுதாயத்தில் எழுத்துணர்வை ஊக்குவிக்கும் வகையில் பாஸ்கரன் எழுதிய அங்குசம் மற்றும் சரளா கண்ணன் எழுதிய மகரந்தம் ஆகிய இரண்டு புத்தகங்கள் இந்த விழாவில் வெளியிடப்பட்டது.

ரோட்டரியில் வழங்கப்படும் “பால் ஹரிஷ் ஃபெல்லோ” என்ற விருது சிறப்பாக பணியாற்றிய ரோட்டரியில் அல்லாத 10 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

விளையாட்டை மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக திகழச்செய்ய அதை ஊக்குவிக்கும் வகையில் முதல் முயற்சியாக எக்ஸெல் குழுமத்தின் ஓர் அங்கமான எக்ஸெல் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் மற்றும் தேசியக் கல்லூரிக்கு இடையிலான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

சமூக வளர்ச்சிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் நபர்களை ஊக்குவிக்கும் வகையில் எக்ஸெல் குழுமம் சார்பில் எக்ஸெல் விருதுகள் 25 நபர்களுக்கு வழங்கப்பட்டது. பெண்கள் கைத்தொழில் சிறப்படைய எக்ஸெல் குழுமத்தின் சார்பில் 10 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. விழாவில் முக்கிய விருந்தினர்களாக விஎம்சி குரூப் நிறுவன நிர்வாக பங்குதாரர் மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனல் முன்னாள் இயக்குனருமான பாஸ்கர், பாப்புலர் பவுண்டேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குனரும், ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனருமான வெங்கடேஷ், நேச்சுரல் சலூன் நிறுவனரும், முதன்மை அதிகாரமான குமரவேல் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரோட்டரி சங்கத்தை சேர்ந்த ஆளுநர்கள், தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள், எக்ஸெல் குழும ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது ரோட்டரி இன்டர்நேஷனல் 3000 ஆளுநர்கள் ஜெரால்டு, ஆனந்த ஜோதி, ராஜா கோவிந்தசாமி, கார்த்திக் உள்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.