
உதகையில் மக்களுக்காக அறக்கட்டளை, தலைமைச் செயலக அனைத்து பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் ஏழை குடும்பங்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு , சிறந்த சமூக சேவையாற்றி வரும் சமூக நல அமைப்புகளுக்கு விருதுகள் ,
பல ஆண்டுகளாக சிறந்த சமூக சேவை செய்து வரும் சமூக ஆர்வலர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்விருதுகள் வழங்கும் நிகழ்வு என முப்பெரும் தமிழ் திருவிழா நிகழ்வு உதகையில் உள்ள JSS மருந்தாக்கியல் கல்லூரியில் உள்ள கூட்டரங்களில் கோலகலமா நடைபெற்றது.
இவ்விழாவில திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக பல்வேறு சமூக நல பணிகள் மற்றும் விழப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து வருகின்ற அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்திர்க்கு அய்யன் திருவள்ளூர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.