Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கண்டோன்மென்ட் கருப்பண்ணசாமி கோயில் குட்டி குடி திருவிழா இன்று நடைபெற்றது.

0

 

கண்டோன்மென்ட் கான்வென்ட் ரோடு
கருப்பண்ணசாமி முத்து மாரியம்மன் கோவில் 46- ம் ஆண்டு திருவிழாவையொட்டி இன்று குட்டி குடி நிகழ்ச்சி.

 

திருச்சி கண்டோன்மெண்ட் கான்வென்ட் ரோடு ராஜகணபதி, முன்னுடையான் ,
மாசி சப்பாணி கருப்பண்ணசாமி, அன்னை முத்துமாரியம்மன் கோவில் 46-ஆம் ஆண்டு திருவிழா கடந்த 7-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.கடந்த 14-ந்தேதி இரண்டாவது மஞ்சள் காப்பு நிகழ்ச்சி நடந்தது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வீதி உலா கடந்த 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 12.05 மணிக்கு .திருச்சி பாரதிதாசன் சாலை, பிராமினேட் ரோடு, மதுரை ரோடு, மேலப்புதூர், கான்வென்ட் ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது.

. 22-ந் தேதி மாவிளக்கு பூஜை, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று 23-ந் தேதி ஒத்தக்கடை மந்தையில் காலை 10 மணிக்கு குட்டி குட்டி திருவிழா சிறப்பாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நானா 24-ந்தேதி அன்னதானமும், 25-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா மற்றும் காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் பூவிடும் விழா நடக்கிறது .தொடர்ந்து இரவு 7 மணிக்கு விளையாற்றி பூஜை நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபர்கள் மருளாளி முனியன், மருளாளி முனுசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.