Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பாதுகாப்பற்ற முறையில் எஸ்பிஐ ஏடிஎம்.

0

'- Advertisement -

 

Ad banner

கடந்த வாரம் திருவண்ணாமலை 4 வங்கி ஏடிஎம்களை உடைத்து பல லட்சம் ரூபாய் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி அதிகாரிகளையும் அழைத்து திருச்சி மாவட்ட கமிஷனர் சத்திய பிரியா வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நவீன முறையில் வலுப்படுத்த வேண்டும்,அனைத்து ஏடிஎம் களிலும் காவலர்களை நியமிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள (பாம்பே சப்பாத்தி அருகில்) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் முற்றிலும் பாதுகாப்பு அற்ற முறையில் உள்ளது.ஏடிஎம் உள்ளேயும், வெளியேயும் மின்சாரம் விளக்குகள் பல மாதங்களாக எரிவது கிடையாது

இந்த ஏடிஎம் வரும் பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் ஒருவித அச்சத்துடனும்,தடுமாற்றத்துடன் வந்து செல்கிறார்கள்.

கமிஷனர் கூறியவுடன் நவீனப்படுத்த வேண்டாம், காவலர்களை கூட உடனே நியமிக்க வேண்டாம், பழுதடைந்த மின் விளக்கை சரி செய்தாவது மிளிர விடலாம் .

ஒன்னாம் தேதி ஈசிஎஸ் பணம் கட்ட வேண்டும் என்றால் 31ஆம் தேதி இரவு 12.01 மணிக்கு அக்கவுண்டில் பணம் இல்லை என்று செக் ரிட்டர்ன் செய்து ஆயிரம் இரண்டாயிரம் வசூல் செய்யும் வங்கியால் போலீஸ் கமிஷனர் கூறிய நவீன பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒரே நாளில் செய்திருக்க முடியும் ஆனால் இரண்டு மூன்று நாட்களாகியும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவால் ஒரு விளக்கு கூட சரி படுத்த முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என வாடிக்கையாளர் ஒருவர் புலம்பி சென்றார்.

கண்டன்மெண்ட் உதவி ஆணையர் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஆனால் எதுவும் அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பாரா என்பதே பொதுமக்களின் ஆவல்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.