Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஈரோடு இடைத்தேர்தல் எங்களுக்கு ஒரு சேலஞ்ச். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

0

 

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக அண்ணாவின் 54 ஆம் ஆண்டு நினைவு ஊர்வலம்

மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தஅண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து காமராஜர் சிலை அருகே இருந்து சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு மௌன ஊர்வலமாகச் சென்று அண்ணாவின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாநகரக் செயலாளர் மதிவாணன் , தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், வண்ணை அரங்கநாதன், மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, மாநில நிர்வாகிகள் சல்மா , செந்தில் ,பகுதி செயலாளர் மோகன் மற்றும் மாநில மாவட்ட மாநகர பகுதி ஒன்றிய நகர பேரூர் வட்ட வார்டு கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக முன்னோடிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறும்போது:

தமிழகம் முழுவதும் அண்ணாவின் புகழை பறைசாற்றும் விதத்தில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இந்த பேரணி நடைபெற்றது.

பகுதி நேர பேராசிரியர்கள் போராட்டத்தை தொடங்கிய அன்றே காலையிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

30 மாவட்டத்தை சேர்ந்த பகுதி நேர பேராசிரியர்கள் தங்களது கருத்துக்கள் அடங்கிய மனுவை என்னிடம் அளித்தனர்.
அதனை வாங்கிக் கொண்டுதான் தமிழக முதலமைச்சர் வேலூர் பயணம் மேற்கொண்ட போது ரயிலில் இதுகுறித்து பேசினேன். குறிப்பாக அவர்களது கோரிக்கைகளில் எவற்றை நிறைவேற்ற முடியும், தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் எவையெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.
இது தொடர்பாக நல்ல ஒரு முடிவை முதலமைச்சரின் தலைமை அலுவலகம் எடுக்கும்.
நிதிநிலைமைக்கு ஏற்ப அவர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதனை படிப்படியாக நிறைவேற்றுகின்ற வண்ணம் எங்களது செயல்பாடுகள் இருக்கும்.
ஆசிரிய பெருமக்கள் எதற்காகவும் வருத்தப்பட வேண்டாம்.இது உங்களுக்கான ஆட்சி.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.
மாநகராட்சி 33 வார்டுகளில் ஒரு வார்டு மட்டுமே அதிமுக கவுன்சிலரை கொண்டுள்ளது. அந்த வார்டு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கும் அந்த சேலஞ்ச் தேவை. நீயா, நானா? என பார்க்கும் அளவிற்கு நாங்களும் களத்தில் இறங்கியுள்ளோம்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செல்லும் இடமெல்லாம் மக்களுடைய வரவேற்பும் சிறப்பாக உள்ளது. குறைந்தபட்சம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.