Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சொந்த தொகுதியில் அடிப்படை வசதிகளை கூடநிறைவேற்றாத அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி. பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகர்

0

 

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சரான மகேஷ் பொய்யாமொழி தனது சொந்த தொகுதியில் மக்களின் அடிப்படை வசதிகளை எதுவும் இதுவரை நிறைவேற்றவில்லை என திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2016 ஆம் ஆண்டு இதே திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆன மகேஷ் பொய்யாமொழி அப்போதுதான் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடும் போது நான் மீண்டும் வெற்றிபெற்று திமுக ஆட்சிக்கு வந்தால் பால்பண்ணை – துவாக்குடி சர்வீஸ் சாலை திட்டத்தை முதலில் நிறைவேற்றுவேன்,தமிழக அரசு கொண்டுவரும் மக்கள் நலத்திட்டங்களை உடனுக்குடன் எனது தொகுதி மக்களுக்கு நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று (மே 7, 2021) இரண்டு ஆண்டுகள் முடிவடையும் நிலையிலும் இதுவரை இந்த தொகுதி மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் நிறைவேற்றப்படவில்லை.

பால்பண்ணை – துவாக்குடி வரை சர்வீஸ் சாலை பற்றி கூறியதை அவர் முற்றிலும் மறந்துவிட்டார்.

வார்டு எண் 45 உள்ள காருண்யா நகரில் எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என கடந்த பத்து வருடங்களாக பொதுமக்கள் போராடியும் எந்த பலனும் இல்லை என்பதால் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் எந்த பலனும் இல்லாததால் கடந்த குடியரசு தினத்தன்று (26.01.2023) பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் காருண்யா நகர் விஸ்தரிப்பு பகுதியில் இல்லாத போது அந்தப் பகுதியில் குடிநீர் வசதிக்காக ரூ.9.5 லட்சம் ஒதுக்கப்பட்டதாக கல்வெட்டு மட்டும் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது,ஆனால் அப்பணி என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை, ரூ.9.5 லட்சம் யாருக்கு போனது என்பதும் தெரியவில்லை.

இதேபோன்று திருவெறும்பூர் தொகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது.சாலை வசதியும் இல்லை.

தெற்கு காட்டூர் பகுதியில் பால்வாடிப் பள்ளி தொடங்குவதாக கூறியிருந்தார்.அது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை இல்லை.

இது மட்டும் இல்லாமல் கடந்த குடியரசு தினத்தன்று அவரது தொகுதியில் சில பள்ளிகள் முழுநேரம் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பத்திரிக்கையாளர்களுக்காக போட்டோ ஷூட் மட்டும் நடத்துகிறார்.மேலும் உதயாநிதி ரசிகர் மன்ற அமைச்சராக தான் செயல்படுகிறார்.
மக்கள் பணிகளை கண்டு கொள்வதே இல்லை.

விரைவில் அமைச்சரின் தொகுதியில் மக்களின் அடிப்படை வசதிகளையும்,
துவாக்குடி  சர்வீஸ் சாலை பணியையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.