Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் பார்வையிழப்பு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: திருச்சி காவல் துறை ஆணையர் தொடங்கி வைத்தார்.

0

 

திருச்சி கே.கே.நகரில்
ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா தொடங்கி வைத்தார்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ஜமால் முகமது கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் காவல்துறையினர் இணைந்து மாபெரும் பார்வையிழப்பு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடத்தினர்.

இந்த வீதி நாடகம் திருச்சி மாவட்டத்தில் பல முக்கிய இடங்களில் இந்த வாரம் முழுவதும் நடைபெற உள்ளது.
பார்வை இழப்பு தடுப்புக்கான சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி 2020 ஆம் ஆண்டில் 43 மில்லியன் மக்கள் பார்வையற்றவர்களாக உள்ளனர். 257 மில்லியன் மக்கள் லேசான பார்வை உடையவர்களாகவும் 507 பேர் பிரஸ் பயோபியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த விழிப்புணர்வை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த வீதி நாடகம் நடைபெற்றது.

இந்த தெருக்கூத்து நாடகத்தில் சர்க்கரை நோயினால் கண்களில் ஏற்படும் விழித்திரை தொடர்பான நோய்கள், கண்புரை, மாறுகண் மற்றும் கண் நீர் அழுத்தம் போன்ற நோய்கள் குறித்தும் இதனால் ஏற்படும் பார்வை இழப்பு தடுப்பது என்பது குறித்தும் மக்களுக்கு நடித்துக் காண்பிக்கப்பட்டது.

இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இவ்விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகத்தை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா தொடங்கி வைத்தார். ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரதீபா முன்னிலை வகித்தார்,ஜமால் முகமது கல்லூரி தாளாளர்,, முதல்வர் இஸ்மாயில் மொய்தீன், செயலாளர் காஜா மொய்தீன் மற்றும் திருச்சி காவல்துறை உதவி கமிஷனர்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அலுவலர் சுபா பிரபு மற்றும் திருச்சி காவல்துறை அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.