Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தந்தை பெரியார் கல்லூரி சார்பில் பெரிய மிளகுபாறை ஆதிதிராவிடர் நல பள்ளியில் மனிதநேய வளர்ச்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு வார விழா

0

'- Advertisement -

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின் படி,
தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
முதல்வர் முனைவர் விஐயலெட்சுமி
தலைமையில் திருச்சி, பெரிய மிளகு பாறை, ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மனிதநேயவளர்ச்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு வார விழா சிறப்பாக நடத்தப்பட்டது.

Ad banner


பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ் வரவேற்புரை நிகழ்த்த, கல்லூரி முதல்வர் சிறப்புரை ஆற்றினார். முதல்வர் தன் உரையில் மனிதநேயத்துடன் அனைவரையும் அரவணைத்து தீண்டாமை ஒழிப்புக்கு எதிராக செயல்பட்டு அனைவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து அப்ப பள்ளியைச் சார்ந்த மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்,

TVK ad

கல்லூரி மாணவ மாணவிகளும் தேச ஒற்றுமை பற்றி கலைநிகழ்ச்சி நடத்தினர்.

இறுதியாக நன்றியுரைடன் அப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக, இனிப்பு காரம், காபி போன்றவை வழங்கபட்டு விழா இனிதே நிறைவுற்றது.

கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் பா பாலமுருகன் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.