Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கியூட்டிஸ் தோல் கிளினிக்:நடிகை ஜனனி திறந்து வைத்தார்.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி தில்லை நகரில்
கியூட்டிஸ் தோல் க்ளினிக் திறப்பு விழா.

TVK ad

திருச்சி தில்லை நகர் 10-வது கிராஸ் கிழக்கு விஸ்தரிப்பில் கியூட்டிஸ் ஸ்கின் என்ற புதிய கிளினிக் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

கிளினிக்கை சினிமா நட்சத்திரம் ஜனனி திறந்து வைத்தார். லலிதா நர்சிங் ஹோம் மற்றும் சியாமளா நர்சிங் ஹோம் டாக்டர் சித்ரா குத்துவிளக்கேற்றி வைத்தார். மேட்டுப்பாளையம் பிளாக் தண்டர் நிர்வாக இயக்குனரும், தொழிலதிபருமான ஜோசப் லூயிஸ் சிகிச்சை அறையை திறந்து வைத்தார். புறநோயாளிகள் பிரிவை டாக்டர் அஷ்ரப் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் கியூட்டிஸ் ஸ்கின் கிளினிக் நிர்வாக இயக்குனர், தோல் லேசர் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர். பாலகணபதி அனைவரையும் வரவேற்று பேசியதாவது :

திருச்சி நகர மக்கள் பயன் பெறும் வகையில் உலகத்தரம் வாய்ந்த சிறப்பு உபகரணங்கள் மற்றும் லேசர் கருவிகள் கொண்டு காது மடல் சீரமைப்பு, முடிமாற்ற சிகிச்சை, பரு மற்றும் தழும்பு நீக்கம், முகப்பரு சிகிச்சை, தோல் பொலிவாக்குதல்,
தோல் நிறமிகள் தொடர்பான சிகிச்சைகள் மற்றும் அழகூட்டல் தொடர்பான தரமான சிகிச்சைகள் இங்கு குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படும். என்றார்.

விழாவில் டாக்டர் . ஹர்ஷினி பால கணபதி, சாரநாதன் பொறியியல் கல்லூரி செயலாளர் ரவீந்திரன், தொழிலதிபர் பிரான்சிஸ், இந்திரா காந்தி கல்லூரி செயலாளர் முனைவர். மீனா, சந்தானம் வித்யாலயா தலைமை நிர்வாக அதிகாரி சந்திரசேகர், டாக்டர்கள் மாத்ருபூதம், காயத்ரி, உமா மகேஸ்வரி, சியாமளா நர்சிங் ஹோம் நிர்வாக இயக்குனர் வைத்தியநாதன் மற்றும் ஏராளமான டாக்டர்கள், தொழிலதிபர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.