Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஆன்லைன் லாட்டரி விற்ற 7 பேர் கைது.திருச்சி சிறப்பு தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

0

'- Advertisement -

திருச்சி OCIU டீமுக்கு கிடைத்த தகவலின் படி திருச்சி ஸ்பெஷல் டீமுடன் இணைந்து
நடராஜ் லாட்ஜில் தங்கி, காந்தி மார்கெட்டில் டீக்கடை தொடங்கி 3 நம்பர் லாட்டரி மாற்றும் ஆன்லைன் லாட்டரி துவங்கி விற்பனை செய்த கீழ்க்கண்டவர்களை கைது செய்தும் பாலக்கரை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

Ad banner

இதில், புதுக்கோட்டையை சேர்ந்த சூசை என்கிற அய்யனார் (வயது 40), இளையான்குடியை சேர்ந்த ஜெகன் (22), விஷ்ணு (23), பள்ளிபாளையத்தை சேர்ந்த அருண் பிரசாத் (24), கர்நாடகாவை சேர்ந்த ஆரோக்கியசாமி (20), திருச்சி பிள்ளைமாநகரை சேர்ந்த மரியமெர்குலிஸ் (47) மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த துரைமுருகன் (37) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 8 செல்போன்கள், ரூ.20 ஆயிரம், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து அந்தந்த பகுதி காவல்நிலையங்களில் ஒப்படைத்து வழக்கு பதியப்பட்டுள்ளது என காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.