Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எடப்பாடி பழனிச்சாமி கைது எதிரொலி:ஸ்ரீரங்கத்தில் பரஞ்ஜோதி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது.

0

'- Advertisement -

 

Ad banner

விடியா திமுக அரசின் சட்டமன்ற பேரவை விதிமீறலை கண்டித்து அறவழியில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்த திமுக அரசை கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. தலைமையில் ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

TVK ad

இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், ஒன்றிய கழக செயலாளர்கள் முத்துக்கருப்பன், நடராஜன், கடிகை கோபால், பகுதி கழக செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜன், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் புல்லட் ஜான், பேரூர் கண்ணதாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறியலில் ஈடுபட்ட அனைவரையும் ஶ்ரீரங்கம் காவல்துறையினர் கைது செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.