Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 2 நாள் நடைபெற்ற மாவட்ட இளையோருக்கான தடகளப்போட்டியின் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

0

திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மறைந்த ஸ்டேட் பேங்க் எஸ்.மோகன் நினைவு சுழல் கோப்பை 2022ம் ஆண்டு இளையோருக்கான
தடகள போட்டிகள் இரண்டு நாட்கள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு தலைமையில்,
தடகள பொருளாளர் ச.ரவிசங்கர், மக்கள் தொடர்புபாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பாபு, துணை செயலாளர் ராமசந்திரன், துணைத் தலைவர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை நடந்தது.

திருச்சி மாவட்ட தடகள தொகுப்பாளர் முனைவர் ஹரிஹரராமசந்திரன் வரவேற்றார் .

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் முதலாக முதல் முன்று நபர்களுக்கு அனைத்து பிரிவினர்களுக்கும் 300, 200,100 என ஊக்கத்தொகையுடன் , பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் பரிசளிப்பு விழா வில் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்றவர்களுக்கு
ரத்னகுமார் மாதுர்
(Joint Commissioner of Custom, GST & Central Excise Dept. Trichy)

ஆனந்தன்
(Commandant of Police, TSP 18N, Trichy.) மற்றும்

வீரசக்தி
ஆப்பிள் மில்லட் ரெஸ்ட்ராண்ட் இயக்குனர்
ஆகியோர்
பதக்கம், சான்றிதழ், மற்றும் கோப்பை வழங்கி வாழ்த்தி சிறப்புரையாற்றினார்கள்.

பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் முசிறி அமலா பெண்கள் மேலனிலைப் பள்ளி
தங்கம் -6, வெள்ளி -7, வெண்கலம் -7

ஆண்கள் பிரிவில் திருச்சி விளையாட்டு மாவட்ட மேம்பாட்டு ஆணையம்,
தங்கம் -15,வெள்ளி -15,வெண்கலம் -7 வென்றனர்.

முடிவில் தடகள சங்க இணைச் செயலாளர் எம்.ரமேஷ் நன்றி கூறினார்.

இப்போட்டியில் தடகள நிர்வாகிகள் ரமேஷ், சந்திரசேகர், மனோகரன் , ஐபுருல்லாகான், லாசர், மதி, நடராசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், 2000 மேற்பட்ட தடகள வீரர்கள், கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்

இப்போட்டியில் தகுதிப் பெற்ற வீரர், வீராங்கனைகள் திருவண்ணாமலையில் 13, 14, 15 மற்றும் 16.10.22 தேதியில் நடைபெறும் மாநில போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். அப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தகுதியின் அடிப்படையில் தேசிய போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.

இந்த தடகள போட்டியினை திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.