Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி எல்பின் அதிபரை கொல்ல முயற்சி. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.

0

 

திருச்சி எல்பின் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் அழகர்சாமியின் சகோதரி மகன் பிரசன்னா. இவர் சிசிடிவி காட்சியுடன் சென்னை வேப்பேரி, பெரிய மேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:
சென்னை ஐயப்பன் தாங்கல் பகுதியில் எனது பெரியம்மா ரேவதி மற்றும் எனது மாமா அழகர்சாமியின் இரு மகள்களான தீபா, சந்தியா, எனது பாட்டி ஆகியோர்களுடம் வசித்து வருகிறேன்.
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு எல்பின் என்ற நிறுவனத்தை எனது மாமா எஸ்.ரமேஷ்குமார் நடத்தி வருகிறார். அந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தது. கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையால், பல ஆயிரம் வாடிக்கையாளராகக் கொண்ட பயனீட்டாளர்களுக்கு சரிவர ஈவுத்தொகையை கொடுத்து செட்டில்மெண்ட் செய்ய சிறிது காலதாமதம் ஆகிவிட்டது.

எல்பின் குரூப் ஆப் கம்பெனி மற்றும் ஸ்பேரோ குளோபல் ட்ரேட் சம்பந்தமான சொத்துக்கள் அனைத்தும் மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி பொருளாதார குற்றப்பிரிவு ஸ்பெஷல் டீம் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிய பணத்தை இஓடபுள்யு மூலமாக செட்டில்மெண்ட் செய்வதற்கு உரிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சிவகாசியை சேர்ந்த கோவிந்தராஜ் எல்பின் நிறுவனத்தை சார்ந்த லீடர்களை மிரட்டி பணம் கேட்டு, பணம் தராத லீடர்கள் மேல் பொய் வழக்கு பதிவு செய்து, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு சிலரை தற்கொலை முயற்சிக்கும் தூண்டி வருகிறார்.
மேலும் போலி ஆவணங்கள் தயாரித்து எனது பெரிய மாமா அழகர்சாமி மற்றும் அவரது மனைவியும், எனது அத்தையுமான சத்தியபாமா மீது பொய் வழக்கு பதிவு செய்து, அவர்களை விசாரணை கைதிகளாக சிறையில் வைக்கும் அளவிற்கு செய்துவிட்டனர்.

அதோடு எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை எது வேண்டுமானாலும் செய்வோம் என்று அவர்கள் பலரிடம் கூறியுள்ளனர். இதுகுறித்த ஆடியோ பதிவும் எங்களிடம் உள்ளது.
அதனால் எங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் இந்த தகவலை கூறி பாதுகாப்பாக இருக்க சொல்வதற்காக அய்யப்பந்தாங்களில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு நானும் எனது மாமா ரமேஷ்குமாரும் கடந்த 30.8.2022 (செவ்வாய்க்கிழமை) சென்றோம்.
பின்னர் வீட்டு வாசல் முன்பு நின்ற எங்கள் வாகனம் டிஎன் 48ஏடி3424 என்ற காரில் கிளம்பும் தருணத்தில் டிஎன்38சிஎம்2714 என்ற ஒரு கார் எங்களை வழிமறித்து பயங்கரமாக மோதி தாக்குதலை ஏற்படுத்தியது. எதோ விபரீதம் நடக்க போகிறது என்பதை உணர்ந்த எனது மாமா ரமேஷ்குமார், யார் இவர்கள், ஏன் இப்படி பிரச்சனை செய்கிறார்கள் என்று கூறிக்கொண்டே காரை விட்டு இறங்கினார்.

அந்த சமயத்தில், எனது மாமா ரமேஷ்குமாருக்கு தெரிந்த கோவிந்தராஜ், மணிபெரியசாமி, தினகரன், முத்துராஜா ஆகிய நான்கு பேரும், எனது மாமா அவர்களை கொலை செய்யும் விதமாக நெருங்கி வந்தனர்.

சட்டென சுதாரித்த எனது மாமா ரமேஷ்குமார் உயிருக்கு பயந்து ஓட ஆரம்பித்தார். அப்பொழுது மணி பெரியசாமி தன்னுடைய காரில் ஏறி மாமாவை எப்படியாவது கார் ஏற்றி கொள்ள வேண்டும் என்று கூறிக்கொண்டே வேகமாக காரை ஓட்டினார். மேலும் அந்த இடங்களில் ஆங்காங்கே இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களில் பலர் அரிவாள், கத்தியுடன் கொலைவெறி தாக்குதல் நடத்தும் நோக்கத்தோடு நின்று கொண்டிருந்தனர்.

அந்த அபாயகரமான சூழலில் மிகவும் சிரமப்பட்டு அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினோம்.
இந்த சூழ்நிலையில் சுமார் இரவு 10 மணி அளவில் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு, எனது வீட்டிற்கு சிலர் சென்றுள்ளனர். வாயிற்கதவுகளை வேகமாக அடித்து தட்டி, கூச்சலிட்டு தகாத வார்த்தைகளை கூறி கதவை திறக்க சொல்லியுள்ளனர். ஏற்கனவே உயிர் பயத்தில் இருந்த என் குடும்பத்தினர் செய்வதறியாது கதவை திறந்தவுடன், அவர்களிடமும் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

மேற்கண்ட சம்பவங்கள் குறித்த அனைத்தும் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. என்னையும், எங்கள் குடும்பத்தினரையும், கொலை செய்யும் முயற்சியில் தீவிரமாக செயல்படும் மேற்கண்ட பட்டாசு ராஜா, என்கிற கோவிந்தராஜ்,மணி பெரியசாமி, தினகரன், முத்துராஜா மற்றும் அவர்களது கூட்டாளிகள் அனைவரிடமும் இதுகுறித்து தகுந்த விசாரணை மேற்கொண்டு, அவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்து எங்கள் உயிரை காப்பாற்றும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். என அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

குறிப்பு:இந்த பட்டாசு ராஜா என்னும் கோவிந்தராஜ் மீது ஏற்கனவே திருச்சி கே கே நகர் காவல் நிலையத்தில் (2019ம் ஆண்டு) ராஜா, ரமேஷ் ஆகியோரை கடத்தியதாகஆள் கடத்தல் வழக்கு, கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.மீண்டும் தற்போது கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பணத்துக்காக எதையும் செய்யவும் இவர் தனது மகளின் திருமணத்திற்கு போஸ்டர்கள் அடித்து மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தியுள்ளார்.

 

ரமேஷ் குமார் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டது அறிந்த முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நிறுவனர்கள் நன்றாக இருந்தால்தான் நாளை முதலீடு செய்தவர்களுக்கு முழுமையான பணம் திரும்ப கிடைக்கும்.நடுவில் உள்ளவர்கள் பணம் பறிக்க ஏதாவது செய்து விட்டால் என்ன செய்வது என அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.