Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தேசிய கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில் சர்வதேச அளவிலான 2 நாள் கருத்தரங்கம்.

0

திருச்சி தேசிய கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம்:

இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்பு:பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் தொடங்கி வைத்தார்.

திருச்சி தேசிய கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் வாழ்க்கைக்கான மொழி, இலக்கியம் கற்றுக் கொள்வது குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் இரண்டு நாட்கள் நடந்தது.இந்தக் கருத்தரங்கில் இந்தியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், துருக்கி, மலேசியா, போடோலந்து ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் 475 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

நேற்று நடந்த முதல் நாள் கருத்தரங்கை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். செல்வம் தொடங்கி வைத்து பேசினார்.

இதில் கல்லூரி முதல்வர் குமார் ,செயலாளர் ரகுநாதன், துணை முதல்வர் இளவரசு, ஒருங்கிணைப்புச் செயலாளர் வசந்தன் உள்பட ஏராளமான பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

 

இரண்டாவது நாளான இன்று கருத்தரங்கை விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ண பிரியா தொடங்கி வைக்க உள்ளார். இன்றைய மாநாட்டிலும் பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.