Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தனித்துவம் தான் நம்மை அடையாளப்படுத்தும். திரைப்பட ஒளிப்பதிவாளர் செல்வகுமார் திருச்சியில் பேட்டி.

0

 

தனித்துவம் தான் நம்மை அடையாளப்படுத்தும் – திரைப்பட ஒளிப்பதிவாளர் செல்வகுமார்.

திருச்சி தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை (viscom) மாணவர்களின் உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு மாணவர்களின் வண்ணமிகு ஓவியங்கள், புகைப்படங்கள் கண்காட்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மாநகரம் மற்றும் மெஹந்திசர்க்கஸ், விருமன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டு
உரையாற்றினார்.

தொடர்ந்து மாணவ மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இந்நிகழ்வில் புனித வளனார் கல்லூரி மற்றும் மீனாட்சி கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத் தலைவர் பிளஸ்சி ,பேராசிரியர் செந்திலதேவி ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஒளிப்பதிவாளர் செல்வகுமார்:

நாளை உலகப் புகைப்படத்தை முன்னிட்டு இன்று பெரியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டேன் இங்கு மாணவ மாணவிகளின் பெயிண்டிங் மற்றும் புகைப்படங்களைக் கண்டு மிகவும் அருமையாக இருந்தது.

2017ல் முதலாம் ஒளிப்பதிவு பதிவு செய்த போது இருந்த தொழில்நுட்பம் தற்பொழுது வருடம் வருடம் மாறி வருகிறது. புதிய நுட்பத்துடன் தரமும் உயர்ந்து வருகிறது. உலகம் தர வாய்ந்த கேமரா இந்தியாவில் தற்போது கிடைக்கிறது.

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கீழ் சீனியர்கள் அநேகர் பணியாற்றி இருக்கிறார்கள். நான் மூன்றாவது தலைமுறையாக தற்போது பணியாற்றி வருகிறேன்.
அவரைப் போல பணியாற்ற வேண்டுமென எல்லோரும் விரும்புகின்றனர்.

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை களத்துக்கு தகுந்தார் போல ஒளிப்பதிவு கொண்டு வருகிறேன்.

தற்போது எனது ஒளிப்பதிவில் விருமன் படம் வெற்றிகாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது எனது அடுத்த படம் 1947 விறுவிறுப்பான கதைக்களம் கொண்டது.

கதை சொல்லுகிற இடத்திற்கு சென்று அதற்கு தகுந்தார் போல எங்களது ஒளிப்பதிவு அமைப்போம் 1947 என்ற படம் அந்த
ஒரு மண் சார்ந்த கிராமத்தில் நடைபெறுகிறது.

எந்த இடத்திலும் மின் இணைப்பு இல்லாத ஒரு கதைக்களம் என்கிற போது அங்கு ஒரு மின்விளக்கு அல்லது மின்கம்பம் இருக்கக் கூடாது
அது தகுந்தார் போல இடம் தேர்வு செய்து ஒளிப்பதிவை மேற்கொள்ள கொள்வோம்.

தற்பொழுது விஸ்காம் பயிலும் மாணவர்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். பெயிண்டிங் இருந்தது தற்பொழுது அது போட்டோகிராபியாக வந்திருக்கிறது.
போட்டோகிராபி உள்ளவர்களுக்கு இன்று வரவேற்பு உள்ளது. சரியான கவனம் செலுத்தினால் இந்த போட்டோகிராபியில் எங்க வேணாலும் யார் வேணாலும் ஜெயிக்கலாம்.

ஜார்ஜ் கிரேஸ் வில்லியம் என்பவரிடம் அசிஸ்டன்டாக ராஜா ராணி கத்தி ஆகிய திரைப்படங்களில் பணியாற்றி வந்தேன்.2017ம் ஆண்டு மாநகரம் என்ற படத்தில் ஒளிப்பதிளராக பணியாற்றினேன்.
என்னுடைய சீனியர் எனக்கு என்ன கற்றுக் கொடுத்தாரோ அதே தான் என்னுடைய ஜூனியர்களுக்கு நான் கற்றுத் தருகிறேன்.
அவர் அவர்களுக்கு ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் இயக்குநர்கள் தேடி வருவார்கள்.

எனக்கு வெற்றிமாறன் அவர்களுக்கு மிகுந்த பிடிக்கும் அவரோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உள்ளது என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.