
திருச்சிராப்பள்ளி சக்தி லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி சென்னை பைபாஸ் ரோடு ஸ்ரீ சங்கீதா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு திருச்சிராப்பள்ளி சக்தி லயன்ஸ் சங்கத்தின் முன்னால் தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார்.
விழாவில் 2022 – 2023ம் ஆண்டின் திருச்சிராப்பள்ளி சக்தி லயன்ஸ் சங்கத்தின் புதிய தலைவராக கீதா வீரசேகரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருடன் நிர்வாக செயலாளராக சரிதா, சேவை திட்ட செயலாளர் கிருபா, பொருளாளர் நிரஞ்சனா உள்ளிட்ட நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் கார்த்திக் பாபு பணியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.

இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட லயன் கீதா வீரசேகரனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களும் கல்லூரி மாணவருக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உடனடி முன்னாள் தலைவர் ஜெயந்தி,துணைத் தலைவர்கள் ஹேமா ஜோதி,அபிராமி,நிர்வாக அலுவலர் ராக ப்ரியா | சங்க மக்கள் தொடர்பு அலுவலர் கீர்த்தனா,சங்க உறுப்பினர் வளர்ச்சி தலைவர் அன்னபூரணி,சேவை திட்ட தலைவர் மெரினா,பன்னாட்டு வளர்ச்சி நிதி தலைவர் சரிமதா,அடக்குனர் பிரவீனா, முடுக்குனர் ஸ்ரீகலா,இயக்குனர்கள் சந்திரா, லட்சுமி, எஸ்ஆர்எம்யூ மாநில துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

