Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கஞ்சா விற்கும் சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

 

Ad banner

கஞ்சா விற்கும் சமூக விரோதிகளை கைது செய்ய கோரி திருச்சியில்

பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்.

 

 

பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் மற்றும் பெண்கள், பொதுமக்களை சீரழிக்க ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்கும் சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி பாஜக கன்டோன்மென்ட் – மணிகண்டம் மண்டல் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மணிகண்டம் தெற்கு ஒன்றிய தலைவர் சிவமூர்த்தி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன், பொது செயலாளர் ஒண்டிமுத்து, மாவட்ட செயலாளர் கள்ளிக்குடி ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட பார்வையாளர் இல.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

மாநில இணை பொருளாளரும், திருச்சி மாநகர் மாவட்ட பார்வையாளருமான சிவசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார்.

 

ஆர்ப்பாட்டத்தின்போது கஞ்சா விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசையும், காவல்துறையையும் கண்டிக்கிறோம்… உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் அழகேசன், பொது செயலாளர் தண்டபாணி, முன்னாள் மாவட்ட தலைவர் திருமலை, சிறுபான்மை அணி மாவட்ட பொது செயலாளர் பாட்ஷா உட்பட  திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

முடிவில் கன்டோன்மென்ட் மண்டல் தலைவர் பரமசிவம் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.