திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை,மற்றும் கல்வி சீர் வழங்கும் விழாவைத் துவக்கி 57 வது வார்டு கவுன்சிலர்
தி.முத்துசெல்வம் துவக்கி வைத்தார்.
தனியார் நிறுவன மேலாளர் ஸ்ரீவத்சன் மாணவர்களுக்கு மகுடம் சூட்டினார்.
மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் தமிழ்செல்வன் பொதுமக்கள் வழங்கிய சுமார் 5 லட்சம் மதிப்புள்ள கல்விசீர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் இரா.ஜெயலெட்சுமி தலைமை தாங்கினார்.
இடைநிலை ஆசிரியை இராஜஷீலா வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் எடமலைப்பட்டிபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி, கலைச்செல்வி ,
பாலகுமரன்,
சதிஸ்குமார், சினேகம் பால்குணா,
கா.பாக்கியலட்சுமி , சு.பரமேஸ்வரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முடிவில் லதா ரோஸ்லின், ஹ.புஷ்பலதா நன்றி கூறினார்,