கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின் படியும், தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர். எழிலன் ஆலோசனைப் படியும் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று (11.05.2022) நடைபெற்றது.
இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியின் பேராசிரியர் முருகானந்தம், கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் துரையரசன், கல்லூரியின் தேர்வு நெறியாளர் முனைவர் ராமசுப்பிரமணியன், தஞ்சை மருத்துவக் கல்லூரியின் ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் வேல்முருகன், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மருத்துவர் மலர்கொடி மற்றும் மருத்துவர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மாபெரும் இரத்ததான முகாமில் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியின் 130 மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இரத்ததானம் செய்தனர்.
இந்த நிகழ்வை கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர். அண்ணாதுரை ஏற்பாடு செய்து சிறப்புற ஒருங்கிணைத்தார்.
இந்த நிகழ்வின் பொழுது கும்பகோணம் மண்டலத்தில் உள்ள அனைத்து கலை அறிவியல் கல்லூரியில் உள்ள யூத் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்கள் கூட்டம் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் தலைமையில் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும் ரத்ததான முகாம் நடைபெற வேண்டும் என்றும் அந்த இரத்த தான முகாம்கள் அரசு ரத்த வங்கி அலுவலர் மூலமாக மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் தனியார் ரத்த வங்கிக்கு ரத்ததான முகாம் நடத்த கூடாது என வலியுறுத்தப்பட்டது.