ஸ்ரீரங்கத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து .
ஸ்ரீரங்கம் திருவளர்சோலை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 25 ) அதே பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன். இருவரும் நண்பர்கள்.
இந்நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த ஹரிகரன் கிருஷ்ணமூர்த்தியை கத்தியால் குத்தியுள்ளார்.
இது குறித்து கிருஷ்ணமூர்த்தி திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் ஹரிஹரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.