திருச்சியில் ஆட்டோவை ஏற்றி வாலிபரை கொலை செய்ய முயன்ற 4 பேர் மீது வழக்கு.
திருச்சி ராம்ஜிநகர் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகன் இளவரசன் (வயது 34) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அம்பிகாபதி என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக குளத்தை ஏலம் எடுப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது.
சம்பவத்தன்று சின்ன கொத்தமங்கலம் பகுதியில் நின்று கொண்டிருந்த இளவரசன் மீது அம்பிகாபதி தனது நண்பர்கள் ஆனந்த், முருகன்,பாபு உள்ளிட்ட நான்கு பேருடன் சேர்ந்து ஆட்டோவை எடுத்து வந்து இளவரசன் மீது கொலை செய்யும் நோக்கில் மோதி காயம் ஏற்படுத்தியதாக இளவரசன் எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் அம்பிகபதி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்