திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சமூக பணித்துறை சார்பில் முதியோர் இல்லத்தில் இலவச கண் மருத்துவ முகாம்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூக பணித்துறை மற்றும் சன்ரைஸ் பவுண்டேஷன் இணைந்து கண் பரிசோதனை முகாம் திருச்சி வாசன் கண் மருத்துவமனை சார்பில் கங்காரு கருணை இல்ல முதியோருக்காக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ராஜவேல் சன்ரைஸ் பவுண்டேஷன் மனநல ஆலோசகர் ரோகித் குமார் கங்காரு கருணை இல்லம் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் நிறுவனர் ராஜா, வாசன் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளசுந்தர்ராஜன் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கங்காரு கருணை இல்லத்தில் நிறுவனர் ராஜா சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் செவிலியர்களுக்கும் மரக்கன்று நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சன்ரைஸ் பவுண்டேஷன் மனநல ஆலோசகர் ரோகித் குமார். மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டினை பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணி துறையின் பேராசிரியர் ராஜவேல், முதுகலை முதலாம் ஆண்டு மாணவி திவ்யஸ்ரீ ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் மற்றும் மற்ற கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.