திருச்சி வயலூர் சாலையில்
ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு சாவு.
திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி சண்முகா நகர் 14-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ராமர். (வயது 48 ). திருச்சி வயலூர் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகன் இளங்கோ மூர்த்தி (வயது 27). என்பவர் ஓட்டலை கவனித்து வந்தார்.
இந்நிலையில் குடிபோதையில் ஓட்டலுக்கு ராமர் வந்து தூங்கி விட்டார் .திடீரென ஓட்டலில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இது குறித்து அவரது மகன் இளங்கோ மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.