திருச்சியில் 2 முதியவர்கள் உள்பட
3 பேர் திடீர் மாயம்.
திருச்சி உறையூர் செவ்வந்தி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தினகரன். (வயது 60 ).இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 30 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி மகேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில் திருச்சி மருங்காபுரி சேதுபட்டியைச் சேர்ந்த முனுசாமி மனைவி நாச்சியம்மாள்.( வயது 70 ).என்பவர் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில் திருச்சி பாலக்கரை பீமநகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் சிவக்குமார். (வயது 42). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட்டில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.