தில்லைநகர் கோட்டை பகுதியில்
லாட்டரி விற்ற
3 பேர் மற்றும்
சூதாடியதாக 10 பேர் மீது வழக்கு.
திருச்சி தில்லைநகர் மற்றும் கோட்டை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது .
இதையடுத்து அந்தந்த பகுதியில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் தில்லைநகர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக சுரேந்திரன், மணிமாறன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் கோட்டை இப்ராகிம் பார்க் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக யோகராஜ் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் திருச்சி கன்டோன்மென்ட், எடமலைப்பட்டிபுதூர், பொன்மலை ஆகிய பகுதிகளில் சூதாடிய 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர்களிடமிருந்து பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.