திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே கழிவு நீரேற்று நிலையம். மேம்பாலத்தையும்,குடிநீர் தொட்டியையும் காப்பாற்ற சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்.
திருவெறும்பூர் 40வது வார்டில் ரயில்வே மேம்பாலத்திற்கு அருகில் கழிவுநீரேற்றும் நிலையம் (பம்ப் ஹவுஸ்) அமைக்க பணி செய்தவர்கள் சில நாட்கள் பணியை நிறுத்தி இருந்தவர்கள் தற்போது மீண்டும் பணி செய்ய துவங்கி உள்ளனர்.
கிட்டதட்ட 14 கோடிக்கு டெண்டர் விடப்பட்டதாக அறியபடும் இந்த கழிவு நீரேற்றும் நிலையம் (பம்ப் ஹவுஸ்) அமைக்கபடும் இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது இல்லை. அந்த இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமானது.
தற்போது பணி நடந்து வரும் பம்ப் ஹவுஸ்க்கு 10 அடிக்கு தெற்கே 1957ஆம் ஆண்டு (கிட்டதட்ட 65 ஆண்டுகளுக்கு முன்பு) கட்டபட்ட திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் தற்போதுவரை இயங்கிவரும் நிலையில் தற்போது பம்ப் ஹவுஸ் கட்டும் வேலையின்போது மண்சரிவு ஏற்படாதா?அல்லது வேறு சில காரணத்தால் மேம்பாலம் பழுதுபட்டால் போக்குவரத்துக்கு வழி?
அது போல வலதுபுறத்தில் பம்ப் ஹவுஸ்க்காக குழிதோண்டும் இடத்தில் இருந்து 10 அடி தொலை வில் 32 ஊர்களுக்கு காவேரி குடிநீர் தரும் மேல்நிலை தேக்க தொட்டி உள்ளது. பம்ப் ஹவுஸ் பணியால் குடிநீர் தொட்டிக்கு சேதாரம் வந்தால் குடிநீருக்கு வழி?
இந்த கழிவுநீரேற்றும் நிலையத்தை அமைக்க 40வது வார்டில் வேறு இடங்கள் உள்ளன.
அவை –
மாநகராட்சி பொது இடம் ( 40 வது வார்டில்)
1. வ.ஊ.சி நகரில் 12 ஆயிரம் சதுர அடியில் காலி இடம்.
2.ஆனந்த் நகரில் 12 ஆயிரம் சதுர அடியில் காலி இடம்.
3. வாரியார் நகரில் 12 ஆயிரம் சதுர அடியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம்.
4.வ.ஊ.சி தெரு 3வது ரோடருகே 10 ஆயிரம் சதுர அடியில் காலி இடம்.
5. திருவெறும்பூர் பழைய E.P.ஆபிசுக்கு அருகே 10 ஆயிரம் சதுர அடியில் காலி இடம்.
திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.என். சேகரனின் மகன்தான் கே.என்.எஸ். சிவகுமார், இவர் தான் தற்போதைய 40வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆவார்.
தந்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற ஒரே காரணத்துக்காக கவுன்சிலர் சீட் பெற்ற சிவகுமாருக்கு இந்த வார்டில் என்ன நடக்கிறது என்பது எள்ளளவும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேம்பாலத்தையும், குடிநீர் தொட்டியையும் காப்பாற்றுங்கள் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்.