திருச்சியில் கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு.
திருச்சியில் கட்டிட பணியில் இருந்த போது தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நச்சலூர் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அ.முனியாண்டி (வயது 52).
கொத்தனார்.
இவர் கடந்த 4 மாதமாக , திருச்சி எடமலை பட்டிபுதூர், அரசு காலனி 5 ஆவது தெருவில் உள்ள மனோகர் என்பவரின் வீட்டில், பைரவா என்ற பொறியாளரிடம் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டார்.
இது தொடர்பாக எடமலைபட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.