அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழைப் பெண்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அம்பேத்கரின் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு தலைமை சபை கிறிஸ்து பிரன்ஹாம் எட்டாவது சபையின் அன்பே தொண்டு நிறுவன தலைவர் சி.எம்.ஆப்ரகாம் போதகர், செயலாளர் எம்.விஜய் ஈசாக் இவர்கள் தலைமையில் 300 ஏழை பெண்களுக்கு சேலை,அரிசி மற்றும் 200 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கனியமுதன், ஆல்பர்ட் ஹென்றி, ஞானம்,17 வது மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், சீமான், இளையராஜா, அரியமங்கலம் கோட்ட தலைவர் ஜெயநிர்மலா, பந்தல் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் 30 வது வட்ட செயலாளர் ஜெ.எட்வின் நன்றியுரை வழங்கினார்.